எனிட் பிளைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Robot: en:Enid Blyton is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Biography enid blyton.jpg|thumb|எனிட் பிளைட்டனின் சுயசரிதம்]]
'''எனின் பிளைட்டன் (Enid Blyton)''' ([[ஆகஸ்ட் 11]], [[1897]] - [[நவம்பர் 28]] [[1968]]; [[ஐக்கிய இராச்சியம்]]) சிறுவர்களுக்காக [[கதை|கதைகள்]]கள், [[கவிதை|கவிதைகள்]]கள், [[நாடகம்]] போன்ற பல ஆக்கங்களை படைத்த ஓர் பிரபலமான [[எழுத்தாளர்]].
 
== இளமைக் காலம் ==
எனின் பிளைட்டன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாக [[ஆகஸ்ட் 11]], [[1897]] ல் பிறந்தார். லண்டனில் பிறந்த இவர் [[பாக்கிங்காம்]] எனும் [[லண்டனின்|லண்டன்]] [[புறநகர்]] பகுதியில் வளர்ந்தார். இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது [[தந்தை]] இவர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். பின்னர் [[பாடசாலை]] விடுதியில் தங்கிப் படித்தார். பாடசாலைக் கல்வியின் பின்பு முன் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இதன் பின்பு ஒரு வருடம் ஆசிரியராகவும் நான்கு வருடம் குழந்தைகள் பராமரிப்பவராகவும் பணிபுரிந்தார்.
 
== திருமணத்தின் பின்பு ==
[[1924]] ல் ஹக் பொலக் என்பவரைத் [[திருமணம்]] செய்து கொண்டார். முறையே [[1931]], [[1935]] ல் இரண்டு குழந்தைகளிற்குத் தாயானார். [[1942]] ல் பொலக்கை விவாகரத்து செய்த எனிட் பிளைட்டன் [[1943]] ல் கெனத் டரல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
 
== ஆக்கங்கள் ==
 
எனிட் பிளைட்டனுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு சிறுவர் சஞ்சிகையில் இவரின் முதல் படைப்பு பிரசுரமானது. பின்னா [[1917]] ல் என்னொரு [[கவிதை]] சஞ்சிகை (Nash's Magazine) ஒன்றில் பிரசுரமானது. [[1921]] அளவில் இவரின் கவிதைகளும் [[கதை]]களும் அதிகமாக பிரசுரமாகத் தொடங்கியது. இவரின் முதலாவது கவிதைப் புத்தகமான சயில்ட் விஸ்பர்ஸ் (Child Whispers) [[1922]] ல் பிரசுரமானது. 1922 அளவில் தன்னை முழுமையாக கதைகள் புனைவதில் ஈடுபடுத்திக் கொண்டார். அன்றிலிருந்து [[1964]] வரை சுமார் 600 சிறுவர் புத்தகங்களை எழுதியதுடன் பல்வேறுபட்ட சஞ்சிகைகளில் பல ஆக்கங்களைப் படைத்தார். Famous Five, Secret Seven, Little Noddy series போன்ற புத்தகங்கள் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தன. இவரின் எழுத்துக்கள் பெருமளவில் இளம் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் இவரின் புத்தகங்கள் 20 ம் நூற்றாண்டில் பல தடவை மறுபிரசுரமானது.
 
== எழுத்து நடை ==
 
எனிட் பிளைட்டனின் கதைகள் பொதுவாக மர்மக் கதைகளாகவோ அல்லது வீரதீரக் கதைகளாகவோ காணப்பட்டது. இவர் பயன்படுத்திய சொற் களஞ்சியத்தின் காரணமாக ஆரம்ப படிநிலை ஆங்கில மாணவர்கள்கூட இக்கதைகளை வாசிக்கக் கூடியதாக இருந்தது. கதைகளில் நல்ல மற்றும் கூடாத [[பாத்திரங்கள்]] தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுவதுடன் நன்னெறிகளைக் கற்பிப்பனவாகவும் உள்ளது.
 
== மறைவு ==
 
இவர் லண்டனின் “ஹம்ப்ஸ்டெட்” எனும் ஊரில் [[நவம்பர் 28]], [[1968]] ஆம் நாளில் மரணமடைந்தார்.
வரிசை 23:
[[பகுப்பு:1897 பிறப்புகள்]]
[[பகுப்பு:1968 இறப்புகள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/எனிட்_பிளைட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது