இறைவனின் தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
 
== புதிய ஏற்பாட்டில் ==
மரியா, '''கடவுளின் தாய்''' என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக எடுத்துரைக்கிறது. [[இயேசுவின் பிறப்பு|இயேசுவின் பிறப்பை]] பற்றி எடுத்துரைக்கும் [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] ஆகிய இரு நற்செய்திகளுமே, மரியாவை இறைவனின் தாயாக சுட்டிக்காட்டுகின்றன.
 
மரியா இறைமகனை கருவில் தாங்கிப் பெற்றெடுத்தார் என்பதை நற்செய்தியாளர் [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]] பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:28-33</ref> இந்த வார்த்தைகள் மரியா [[மகனாகிய கடவுள்|மகனாகிய கடவுளின்]] தாய் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
 
இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கு மரியாவிடம் நிறைவேறியதை நற்செய்தியாளர் [[மத்தேயு (திருத்தூதர்)|மத்தேயு]] பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: யோசேப்புக்குக் கனவில் தோன்றிய ஆண்டவரின் தூதர், "மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு '''இம்மானுவேல்''' எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:20-22</ref>
 
[[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுலும்]] மரியா இறையன்னையே என்பதைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: "காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்."<ref>[[கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்|கலாத்தியர்]] 4:5</ref> இறைத் திட்டத்தின்படி இறைமகனைப் பெற்றெடுத்த மரியா, '''இறையன்னை''' என்றப் பெயரை உரிமையாக்கிக் கொண்டார். எனவேதான் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து மரியாவை நோக்கி, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! '''என் ஆண்டவரின் தாய்''' என்னிடம் வர நான் யார்?"<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:42-43</ref> என்கிறார்.
 
== விசுவாசக் கோட்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/இறைவனின்_தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது