வாருங்கள்!

வாருங்கள், Agnel, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:14, 8 சூன் 2011 (UTC)Reply

படங்கள்

தொகு

வணக்கம் agnel,

உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியாவில் பிற தளங்களில் வெளியான படங்களைப் பயன்படுத்த இயலாது. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகள் அதற்கு இடம் தராது. எனவே பிற தளங்களில் (வலைத்தளம், பத்திரிக்கை போன்றவை) வெளியான படங்களைப் பதிவேற்ற வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:55, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இரு கணக்குகள்

தொகு

agnel,

agneljose என்ற கணக்கும் உங்களுடையது என நினைக்கிறேன். ஏதேனும் ஒரு கணக்கிலிருந்து மட்டும் பங்களிக்க வேண்டுகிறேன். உங்களுடன் தொடர்பு கொள்ளவும், உங்கள் பங்களிப்புகளைப் பார்வையிடவும் அதுவே உகந்ததாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:22, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

 
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவைகள்

  1. தாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.
  2. ஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
கிறித்தவம் குறித்த பல அருமையான பங்களிப்புகளை செய்து வரும் தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 03:59, 20 செப்டெம்பர் 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சோடாபாட்டில் கூறியதையே நானும் கூறுகிறேன். வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் 11:31, 24 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:38, 24 செப்டெம்பர் 2011 (UTC)Reply

கட்டுரைகளின் பெயர்களை மாற்ற

தொகு

ஐயா, கத்தோலிக்கத் திருச்சபையினைப்பற்றி நீங்கள் நீங்கள் தமிழ் விக்கியில் பல கட்டுரைகளை இட்டும், மேம்படுத்தியும் வருகின்றீர்கள். பாராட்டுகள்.

ஒரு கட்டுரையின் தலைப்பை மாற்ற அக்கட்டுரையினை வேறு பெயருக்கு நகர்த்தலாம். (மேலதிக தகவலுக்கு இங்கே காண்க) இதனால் அக்கட்டுரையின் வரலாறு பாதுகாக்கப்படும்.

திருத்தந்தையர்களின் குல மரபுச் சின்னம் என்னும் கட்டுரையில் இதனை செய்திருக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:31, 4 அக்டோபர் 2011 (UTC)Reply

படிமப் பதிப்புரிமை

தொகு

சில படிமங்களை “pd-self" பதிப்புரிம வார்ப்புருவுடன் பதிவேற்றியிருப்பதைக் கண்டேன். நாம் ஆக்கிய - அதாவது எடுத்த படங்களை மட்டுமே “own work" என்று சொல்ல முடியும். பிற படங்களை ஓவியங்களை ஃபோட்டோஷாப் கொண்டு நாம் மாற்றியமைத்திருந்தாலும் அதன் அடிப்படை பதிப்புரிமை மாறாது - நாம் அதன் ஆக்குனர் ஆக மாட்டோம். நீங்கள் இறுதியாகப் பதிவேற்றிய இரு படங்களிலும் பொருத்தமான பதிப்புரிமை வார்ப்புருவை இணைத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:53, 24 அக்டோபர் 2011 (UTC)Reply

இந்தப் படம், உங்கள் சொந்த ஆக்கமாகாது, இது இந்தத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய படங்களை “gfdl-self" என்று பதிவேற்ற முடியாது. விக்கிப்பீடியா பிற இந்தியத் தளங்களைப் போலன்று. சற்றே கடுமையான அமெரிக்க விதிகளைப் பின்பற்றுகிறது. இது குறித்த கொள்கைகளைப் படிக்க காண்க விக்கிப்பீடியா:பதிப்புரிமை. அருள் கூர்ந்து இவ்வாறான படங்களை பதிவேற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 13:58, 26 அக்டோபர் 2011 (UTC)Reply


Louise de Marillac

தொகு

அருள் கூர்ந்து ஏன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். louise என்ற பெண்பால் பெயர் லுயீஸ் என்றே ஒலிக்கப்படும். லூயிஸ் என்றல்ல. (குறில் உ, நெடில் ஈ) முன்னொரு முறை பிராகா நகர் குழந்தை ஏசு கட்டுரையில் இது போலவே செய்தீர்கள். தலைப்பை நகர்த்தும் போது ஏன் நகர்த்தப்பட்டது என்று சுருக்கமிட்டு நகர்த்தியிருப்பின் அதை கவனியுங்கள் (கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் சுருக்கங்கள் தெரியும்). மாற்று கருத்திருப்பின் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் விவாதியுங்கள். தன்னிச்சையாக மீண்டும் நகர்த்தாதீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 16:25, 30 அக்டோபர் 2011 (UTC)Reply

படிமங்கள்

தொகு

வணக்கம் அக்னெல், தமிழ்விக்கியில் படிமங்களைத் தரவேற்றும் போது அவை எங்கிருந்து பெறப்பட்டது, காப்புரிமை அற்றதா போன்ற விபரங்கள் தரப்பட வேண்டும். அல்லது நியாயமான பயன்பாடு குறித்த விளக்கமாவது தரப்பட வேண்டும். இல்லாவிடில் அவை நீக்கப்படும். அந்த வகையிலேயே உங்கள் படிமங்கள் சில நீக்கப்பட்டுள்ளன. காமன்சில் ஏராளமான படிமங்கள் உள்ளன. அவற்றை முடிந்த வரையில் பயன்படுத்தப் பாருங்கள். மேலும் உங்கள் கட்டுரைகளில் சிறு சிறு திருத்தங்கள் (விக்கியாக்கம் என்பார்கள்) செய்ய எவருக்கும் உரிமை உண்டு. கட்டுரையில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்கு முன்னால் அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்து ஏனையோரின் கருத்துகளையும் பெற்று மாற்றுவதே முறை. விக்கியில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு கட்டுரையை எழுதத் தொடங்கியவர் உரிமை கோர முடியாது. அவ்வாறே உங்கள் கட்டுரையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அப்படியான மாற்றங்கள் உங்களுக்கு ஒப்பானவையாக இல்லாவிட்டால் அதனை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தந்து தரமான கட்டுரையாக வளர்த்தெடுப்பதே விக்கி நடைமுறை. அருள் கூர்ந்து இதனைப் புரிந்து கொண்டு உங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 09:30, 1 நவம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் அக்னெஸ். உங்கள் தொடர் பங்களிப்பை விக்கி எதிர்பார்க்கிறது.கட்டற்ற உரிமம், விக்கியாக்க பொது வடிவம், ஆக்கங்களுக்கான காப்புரிமை என்பவற்றில் தமிழ் விக்கிப்பீடியர்களும் கரிசனை கொண்டு செயற்படுவதே எமது ஆக்கங்களுக்கான தரத்தை மேம்படுத்துவதுடன் விக்கியின் பொதுக் கொள்கைகளுக்கு இசைவாய் இருக்கவும் உதவும். இதுவே நீங்கள் பங்களிப்புச் செய்த சில ஆக்கங்களில் மற்றப் பயனர்கள் தொகுப்புச் செய்ய காரணம். புரிந்துகொண்டு தொடர்பங்களிப்பை நல்குவீர்களென எதிபார்க்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 09:46, 1 நவம்பர் 2011 (UTC)Reply

agnel, நான் குமரிக்கண்டம் என்ற ஒன்றை நிரூபிப்பதையே என் வாழ்க்கையாக கொண்டிருக்கிறேன். அப்படி எண்ணம் கொண்ட நான் முதலில்(முதல் கட்டுரையே) விக்கியில் எழுதிய குமரிக்கண்டத்தின் ஆதாரங்கள் என்னும் கட்டுரை நீக்கப்பட்ட போது மிகுந்த வருத்தம் இருந்தது. ஆனால் இரண்டே நாட்களில் இது தான் விக்கிப்பீடியா என்று புரிந்து கொண்டேன். இதைப்போலவே நான் எழுதிய குங்ஃபூ பல்லவன் என்னும் கட்டுரை போதிதருமன் என்னும் கட்டுரையில் இணைக்கப்பட்டது. அதன் காரணங்களும் சில நாட்களில் புரிந்து கொண்டேன். விக்கியில் உங்களை கட்டம் கட்டி எவரேனும் காயப்படுத்த வேண்டும் என முயன்றாலும் அது முடியாது. இது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினையே. உங்களை போல் புதிய பயனர் பதக்கங்கள் வாங்கியவர்கள் பட்டியல் மிகக் குறைவு. நீங்கள் உங்கள் விக்கிப்பணியை தொடர்வீர்கள் என கருதுகிறேன்.

உங்களின் சேவை விக்கிக்கு தேவை.--தென்காசி சுப்பிரமணியன் 09:52, 1 நவம்பர் 2011 (UTC)Reply

infobox diocese

தொகு

வார்ப்புரு:Infobox diocese இனை சரி செய்துள்ளேன். ஆனால் முழுமையாக மொழிபெயர்க்கவில்லை. (கிறித்துவம் தொடர்பான சில வார்த்தைகளுக்கு சரியான மொழிபெயர்ப்பு தெரியவில்லை என்பதால் விட்டுவிட்டேன்). label.. எனத் தொடங்குபவற்றை மற்றும் மொழிபெயருங்கள். data.. என வருபவை நிரல் துண்டுகள். அவற்றை மாற்றவேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 12:55, 4 நவம்பர் 2011 (UTC)Reply

மறைமாவட்டம்

தொகு

மறை மாவட்டங்கள் பற்றி கட்டுரை எழுதிவருகுறீர்களல்லவா? மறைமாவட்டம் என்றால் என்ன என்று ஒருதனி கட்டுரையாக எழுதி ஒவ்வொரு மறைமாவட்டம் பற்றிய கட்டுரையிலும் -------------- மறைமாவட்டம் என்பது ஒரு மறைமாவட்டம் ஆகும் என்பது போல் எழுத வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 03:48, 6 நவம்பர் 2011 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
ஆகிய விரைவில் விக்கிப்பீடியா பற்றி புரிந்து கொண்டு மீண்டும் பங்களிக்க வந்தது கண்டு மகிழ்ச்சி. மேலும், விக்கிப்பீடியாவினைப் பற்றி ஏதேனும் ஐயங்களிருப்பின் என்னைத் தொடர்பு கொள்ளவும். :) வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:14, 13 நவம்பர் 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உங்களுக்கு தெரியுமா திட்டம்

தொகு



முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு





100 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Agnel!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 18:16, 3 சூலை 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Agnel!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:29, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம். இம்மாதம் உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:45, 11 சனவரி 2015 (UTC)Reply

Global account

தொகு

Hi Agnel! As a Steward I'm involved in the upcoming unification of all accounts organized by the Wikimedia Foundation (see m:Single User Login finalisation announcement). By looking at your account, I realized that you don't have a global account yet. In order to secure your name, I recommend you to create such account on your own by submitting your password on Special:MergeAccount and unifying your local accounts. If you have any problems with doing that or further questions, please don't hesitate to contact me on my talk page. Cheers, DerHexer (பேச்சு) 11:35, 17 சனவரி 2015 (UTC)Reply

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:34, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Agnel&oldid=3183893" இலிருந்து மீள்விக்கப்பட்டது