"சந்தனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

339 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==வசுக்கள்==
[[File:Raja Ravi Varma, Ganga and Shantanu (1890).jpg|thumb|200px|கங்கை, அவர்களது எட்டாவது குழந்தையை நீருள் அமிழ்த்திக் கொல்வதைச் சந்தனு தடுப்பதைக் காட்டும் ஓவியம்.]]
கங்கை - சந்தனு இணையரின் முதல் குழந்தை பிறந்தது முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கிடையே [[கங்கை]] முதல் குழந்தையை [[கங்கை]] நீரில் மூழ்கடித்தாள். அழகான மனைவியை இழக்க விரும்பாத சந்தனு அமைதி காத்தான். அடுத்த வருடமும் இப்படியே நடந்தது, இப்படியே [[கங்கை]] ஏழு குழந்தைகளை ஆற்றிலே மூழ்கடித்தாள். ஒவ்வொரு முறையும் சந்தனு அமைதியாகவே இருந்தான். எட்டாவது குழந்தையை கங்கையில் விடும்போது சந்தனு அழுது கூச்சலிட்டான். "ஏ! இரக்கமில்லாதவளே நிறுத்து அவன் ஒருவனாவது வாழட்டும்" என்றான். [[கங்கை]] அவனை பார்த்து சிரித்தாள், "உங்கள் வார்த்தையை மீறிவிட்டீர்கள், புரூரவரை ஊர்வசி விட்டுச் சென்ற மாதிரி, நானும் உங்களை விட்டு பிரிய வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் நதியில் விட்டது எட்டு வசுக்களில் ஏழுபேர், வசிட்டரின் பசுக்களை திருடிய குற்றத்திற்காக குழந்தைகளாக பிறக்க சாபம் பெற்றவர்கள். எட்டு பேரின் வேண்டுதலுக்காக நான் தாயானேன். அவர்கள் பூமியில் மிக மிகக் குறைந்த காலத்திற்கு வாழட்டும் என தீர்மானித்தேன், ஆனால் கடைசியாகப் பிறந்தவனை காப்பாற்ற முடியவில்லை, இவன் மிகவும் சிரமப்படுவான். திருமணம் செய்து கொள்ளமாட்டான். உமக்குப் பிறகு ஆட்சிக்கும் வரமாட்டான். உமக்கு அடுத்தபடியாக குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பான், ஆணாக இருக்கும் ஒரு பெண்ணின் கையால் மிக கேவலமாக மரணமடைவான்". குறுக்கிட்டான் "சந்தனு அப்படி நடக்காது, நடக்க விடமாட்டேன்" என்றான் ஆவேசத்துடன்."சரி விடுங்கள் உங்கள் மகனை வளர்த்து சிறந்த போர் வீரனாக்குவேன். போர் கலையில் தேர்ந்த [[பரசுராமன்|பரசுராம]]னிடம் சீடனாகச் சேர்ப்பேன். மணவயதை அடைந்ததும் உங்களிடம் அழைத்து வருகிறேன் அப்போது சந்திப்போம்" என்று கூறி மகன் ([[வீடுமர்]]), [[தேவவிரதன்|தேவவிரதனு]]டன் மறைந்து விட்டாள், சந்தனு தனித்து விடப்பட்டான். <ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1683679" இருந்து மீள்விக்கப்பட்டது