அரிசுட்டாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 20:
'''அரிசுட்டாட்டில்''' (அல்லது '''அரிஸ்டாட்டில்''' (''Aristotle'')) (கிமு 384 - கிமு 322) ஒரு [[பண்டைய கிரீஸ்|கிரேக்க]]த் [[தத்துவஞானி]] மற்றும் பல்துறை வல்லுநர். அவரது எழுத்துக்களில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், மற்றும் விலங்கியல் ஆகியன இடம் பெற்றிருக்கும். [[பிளேட்டோ]]வும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகஅதிக செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிஸ்டாட்டில் மேற்கத்திய தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவனர் ஆவார்.அரிஸ்டாட்டிலின் படைப்புக்களே மேற்கத்திய தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தர்க்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின.அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துக்கள், ஆழ்ந்த அறிவைத்தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிஸ்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்ச்சியே ஆகும்.அரிஸ்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமான இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாலர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.
இவ்விருவரும், [[சாக்கிரட்டீஸ்|சாக்கிரட்டீசும்]] முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். [[பிளேட்டோ]], அரிஸ்டாட்டிலின் குரு. [[சாக்கிரட்டீஸ்|சாக்கிரட்டீசின்]](கிமு 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. மாவீரன் அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார்.
அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இஸ்லாமிய மற்றும் யூத மரபுகளில் தத்துவ மற்றும் இறையியல் சிந்தனையில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாககுறிப்பாகக் கிரிஸ்துவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிஸ்டாட்டிலை இடைக்கால முஸ்லீம் அறிவுஜீவிகள் "முதல் ஆசிரியர்"( 'المعلم الأول') எனஎனப் போற்றினர்.அரிஸ்டாட்டில் எழுதிக்குவித்த நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது.அரிஸ்டாடிலின் சிந்தனைகள் தமிழ்,ஆங்கிலம்,லத்தீன், சிரியாக், அராபிக், இத்தாலியன், ஃபிரெஞ்ச், ஹீப்ரு, ஜெர்மன் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
 
==பிறப்பு==
அரிஸ்டாட்டில் என்றால் "சிறந்த நோக்கம்," என்று பொருளாகும்.இவர் ஸ்டகிரா,ஷல்சிடிஸில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெஸாலோனிகி யில் இருந்துயிலிருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியாவின் மன்னர் அமயின்டாஸின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார்.அரிஸ்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாஸிடோனியன் மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.பதினெட்டு வயது நிரம்பிய அரிஸ்டாடில் பிளேட்டோவின் அகாடமியில் அவரது கல்வியை தொடர ஏதென்ஸ் சென்றார். அரிஸ்டாட்டில் கி.மு. 348/47 ஏதென்ஸ் விட்டுவிட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அகாடமியில் கல்வி கற்றார்.பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் சகோதரனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிஸ்டாடில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் அசியா மைனருக்கு பயனத்தை மேற்கொண்டார். பயணத்தின் போது லெஸ்போஸ் என்னும் தீவின் விலங்கியல் மற்றும் தாவரவியல் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.அரிஸ்டாட்டில் ஹெர்மியாஸ் இன் வளர்ப்பு மகள் பிதியாஸைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிஸ்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிடோனியா மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க அவரது மகன் அலெக்சாண்டர்க்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிஸ்டாட்டில் மாசிடோனியா ராயல் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்ஸ் திரும்பினார், அங்கு லைசியம் என தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிஸ்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பள்ளியில் படிப்புகளை நடத்.திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்ஸில் அரிஸ்டாடில் இருந்த போது, அவரது மனைவி பிதியாஸ் இறந்தார்.அரிஸ்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்ஸில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்ஸாண்டர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயா வில் அரிஸ்டாடில் இறந்தார். அரிஸ்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிஸ்டாடில்.
 
==அலெக்சாந்தரும் அரிஸ்டாடிலும்==
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டாட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது