பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Tamiliam!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- mohamed ijazz(பேச்சு) 07:05, 17 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
மொழிக்கருவி கொண்டு பிழை திருத்தி வருவதால் இந்த பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:12, 19 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 19 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம் தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரைதிருத்தத்தில் சிறப்பாக ஈடுபட வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:14, 26 ஆகத்து 2014 (UTC)

சுய விவரங்கள்தொகு

பயனர்:Tamiliam நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:41, 22 ஆகத்து 2014 (UTC)

சுயவிவரம் தொகுத்ததற்கு நன்றி. நீங்கள் கடாரத்தவர் என்றால் எனக்கு ஒரு கல்வெட்டுப்படம் வேண்டும். ஒரு பாண்டிய அரசனின் கல்வெட்டு ஒன்று கடாரம் அருகில் உள்ளதாக அறிகிறேன். அதன் படமும் தொல்லியல் அறிக்கையின் நகலும் (சாப்டு காப்பியும்) தேவை. இப்போது நீங்கள் கடாரத்தில் தான் உள்ளீர்களா இல்லை நியூயார்க்கா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:15, 26 ஆகத்து 2014 (UTC)

நான் மலேசியாவில் புத்ராஜெயா என்ற ஊரில் வசிக்கிறேன். ஆனால், அவ்வப்போது கேடாவிற்குத் திரும்புவதுண்டு. நீங்கள் குறிப்பிட்ட பாண்டிய அரசனின் பெயர் என்ன? எந்தக் காலத்து மன்னன்? பூஜாங் பள்ளத்தாக்கில் ஆர்வம் கொண்டுள்ள குழுக்கள் சில இடையில் மலேசியாவில் தோன்றியுள்ளன. அவர்களிடம் உதவி கேட்டுப் பார்க்கலாமே. எ-டு https://www.facebook.com/Pujangham.bujangvalleykedahmsia --Tamiliam (பேச்சு) 00:58, 27 ஆகத்து 2014 (UTC)

நீங்கள் கொடுத்த முகநூல் பயனருக்கும் நட்புக்கோரிக்கை வைத்திருக்கிறேன். அந்த பாண்டிய அரசன் பெயர் ஜெயநேகரன். அவன் சாவக அரசனுக்கும் பாண்டிய இளவ்ரசிக்கும் பிறந்ததால் பாண்டியன் பட்டத்தையும் போட்டுக்கொண்டான். ஆனால் அவன் பாண்டிய இளவரசியை மணந்தது என்னால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு. காலம் 14ஆம் நூற்றாண்டு. உங்கள் முகநூல் கணக்கின் இணைப்பை (இல்லை எனில் மின்னஞ்சலை) எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் இன்னும் நலம். tenkasisubramanian@gmail.com --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:23, 27 ஆகத்து 2014 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Tamiliam!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 20:25, 6 செப்டம்பர் 2014 (UTC)

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:06, 8 செப்டம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Tamiliam!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:13, 30 திசம்பர் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamiliam&oldid=1774426" இருந்து மீள்விக்கப்பட்டது