சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
==இளமைக் காலம்==
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி]] மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட [[கொழும்புச் செட்டி]]மார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள [[புத்தளம்]] என்னும் நகருக்கு அண்மையில் [[கற்பிட்டி]]யில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று [[சிங்களம்|சிங்கள]]ப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு [[தமிழர்]] வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் [[தமிழ்|தமிழே]] விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், [[சிங்களம்]], அக்காலத்து ஆட்சி மொழியான [[ஆங்கிலம்]] என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, [[சமஸ்கிருதம்]], [[போத்துக்கீச மொழி]], [[டச்சு மொழி]], [[லத்தீன்]], [[கிரேக்கம்]], [[எபிரேயம்]], [[அரபு மொழி]] ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம்தேர்ச்சி பெற்று விளங்கினார்.
 
==இவர் வகித்த பதவிகள்==
 
இவரது பதினேழாவது வயதில், [[1824]] ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொராவது வயதில் [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான [[மணியகாரர்|மணியக்காரராக]] (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் [[முதலியார்|முதலியாராகவும்]] எற்கனவே இருந்த [[மணியகாரர்]] பதவியிலும் பணியாற்றினார்.<ref name=dinamani>[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=168&Itemid=249 "தமிழ் புளூராக்" படைத்த சைமன் காசிச் செட்டி], பொ.வேல்சாமி, தினமணி</ref>
 
[[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த [[ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி|திரு. ஆ. குமாரசுவாமி முதலியார்]] 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிடவேகாலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, [[1838]] இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|இலங்கைச் சட்டசபை]] உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, [[1848]]-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் [[1852]]-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாக சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.<ref name=root>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen7017.html இலங்கையின் கொழும்புச் செட்டி வம்சம்]</ref>
 
==ஆற்றிய சேவைகளும், சாதனைகளும்==
வரிசை 45:
இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், [[இலங்கை]]யில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "[[சிலோன் கசற்றியர்]]" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், [[இலண்டன்|இலண்டனி]]லும் கூடப் புகழ் பெற்றார். இவர் [[உதயாதித்தன்]] என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார்.
 
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "[[தமிழ் புளூட்டாக்]]" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.<ref name=tamilnation>[http://tamilnation.co/books/Literature/plutarch.htm The Tamil Plutarch A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon, Simon Casie Chetty], தமிழ்நேசன் - {{ஆ}}</ref><ref name=dinamani/>
 
[[மாலைத்தீவுகள்|மாலைத்தீவு]] மொழியிலே [[சிங்களம்|சிங்கள மொழி]] கலந்துள்ளமை பற்றியும் [[ஜாவாத்தீவு|ஜாவாத்தீவின்]] மொழிக்கும் [[சமஸ்கிருத மொழி|சமஸ்கிருத மொழிக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
வரிசை 56:
 
==இறப்பு==
சைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு [[நவம்பர்]] மாதம் ஐந்தாம் திகதியன்று ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.<ref name=dinamani/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் புளூட்டாக்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=Chitty,_Simon_Casie}}
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்] - [[பொ. பூலோகசிங்கம்]]
*[http://tamilnation.co/books/Literature/plutarch.htm Among the Chetties rose a great Tamil scholar] - {{ஆ}}
*[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=168&Itemid=249 தமிழ் புளூராக்" படைத்த சைமன் காசிச் செட்டி], [[தினமணி]], பொ.வேல்சாமி
*[https://archive.org/details/jstor-3014159 An Outline of the Classification of the Tamul Castes (January 1, 1865)] - {{ஆ}}
 
*[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen7017.html இலங்கையின் கொழும்புச் செட்டி வம்சம்]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1807 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது