திருவெளிப்பாட்டு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
"File:Rubens woman of apocalypse.jpg|right|thumb||300px| [[தூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
'''12:11-12''' ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை: இறக்கவும் தயங்கவில்லை. இதன்பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள். மண்ணுலகே, கடலே, ஐயோ! உங்களுக்குக் கேடு! தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது: அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.
 
'''12:13-17''' தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது. ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார். அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.16 ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து, அரக்கப்பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது. இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.
''
</blockquote>
வரிசை 23:
 
=== அன்னை மரியா ===
தொடக்க காலம் முதலே திருவெளிப்பாட்டில் சித்தரிக்கப்படும் பெண்ணை கன்னி மரியாவுக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்தது. "எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார்"<ref>திருவெளிப்பாடு 12:5</ref> என்ற வார்த்தைகள், இயேசுவின் தாயைக் குறிப்பதாக அமைந்துள்ளன. ஏனெனில், கன்னி மரியாவின் மகனாக பிறந்த இயேசுவையே உலகாளும் அரசராக விவிலியம் சித்தரிக்கிறது. "அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன"<ref>திருவெளிப்பாடு 12:14</ref> என்ற வசனம், [[மரியாவின் விண்ணேற்பு|மரியாவின் விண்ணேற்பை]] குறிப்பதாக பழங்கால கிறித்தவர்கள் கருதினர். மேலும், "அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்"<ref>திருவெளிப்பாடு 12:1</ref> என்ற வருணனை மரியாவின் விண்ணக மாட்சியை விவரிப்பதாக கருதப்படுகிறது.
 
=== திருச்சபை ===
அதே நேரத்தில், திருவெளிப்பாட்டில் காணப்படும் பெண் திருச்சபைக்கும் ஒப்பிடப்படுகிறார். இங்கு திருச்சபை என்பது கிறித்தவர்களை மட்டும் குறிக்காமல், ''கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்'' என்ற பொருளில் [[இசுரயேலர்|இஸ்ரயேல் மக்களை]]யும் உள்ளடக்கியதாக உள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் இருந்தே [[மகனாகிய கடவுள்|இறைமகன் இயேசு]] தோன்றினார். பெண்ணின் தலைமீது காணப்பட்ட விண்மீன்கள் [[திருத்தூதர்]]களை சுட்டிக்காட்டுவதாகவும், கதிரவன் திருச்சபையின் மாட்சியை சுட்டுவதாகவும், நிலவு திருச்சபையின் உயர்நிலையைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. "அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது"<ref>திருவெளிப்பாடு 12:17</ref> என்ற வசனத்தில், 'அரக்கப்பாம்பு' என்பது அலகையையும், 'எஞ்சிய பிள்ளைகள்' என்பது தொடக்க காலத்தில் துன்புற்ற கிறித்தவர்களையும் சுட்டிக்காட்டுகிறன.
 
== மரியாவின் காட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/திருவெளிப்பாட்டு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது