குடும்பப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
கூடுதல் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்னும் கருத்துரு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தைச் சேர்ந்தது. இது மத்திய காலத்தில் வழக்கில் இருந்த துணைப்பெயர் அல்லது பட்டப்பெயர் வழக்கத்தில் இருந்து உருவானது. ஒருவருடைய தொழில் அல்லது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு துணைப்பெயர்கள் வழங்கப்பட்டன. ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும்போதே பெரும்பாலும் துணைப் பெயர்களின் தேவை ஏற்பட்டது.
 
==பெயர் ஒழுங்கில் குடும்பப் பெயர்==
பெரும்பாலான மேல் நாட்டுப் பண்பாடுகளில் குடும்பப் பெயர் சூட்டிய பெயருக்குப் பின்னால் இறுதிப் பெயராக வரும். ஆனால், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், [[உருசியா]], [[சீனா]], [[சப்பான்]], [[கொரியா]], [[மடகாசுக்கர்]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளிலும், [[இந்தியா]]வின் சில பகுதிகளிலும் இது சூட்டிய பெயருக்கு முன் வைக்கப்படுகிறது. எனினும் சப்பான், தாய்லாந்து, அங் ஆங்க் போன்ற நாடுகளில், பெயர்களை இலத்தீன் எழுத்தில் எழுதும்போது மேல் நாட்டு முறைப்படி ஒழுங்கு மாற்றி குடும்பப் பெயரைப் பின் வைத்து எழுதுகின்றனர். பன்னாட்டுத் தொடர்புகளில் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில், இந்த நடை முறையைப் பல பண்பாட்டினரும் கடைப்பிடிக்கின்றனர்.
 
இந்தியாவின் பல பகுதிகளில் சாதிப் பெயரே கூடுதல் பெயராக வழங்கி வருகின்றது. ''காமராச நாடார்'', ''சரத் யாதவ்'', ''சந்திரபாபு நாயுடு'' போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டில் சாதிப் பெயர்களைச் சேர்த்து வழங்கும் முறை தற்போது சட்டப்படி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
 
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடும்பப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது