முந்நீர் (சொல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sengai Podhuvan பயனரால் முந்நீர் (கடல்), முந்நீர் (சொல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கனகுசீ...
No edit summary
வரிசை 4:
:மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
:முரசு முழங்கு தானை மூவர் - புறநானூறு 35</ref> கடலில் பொழிந்து கடல் வளத்தைப் பெருக்கும் மழைநீர், ஆறு அடித்துக்கொண்டு வரும் மழைநீர், மண்ணிருந்து ஊறிவரும் ஊற்றுநீர் ஆகிய மூன்று நீரும் கலந்தது என்னும் கருத்துடன் முந்நீர் என்னும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
==முந்நீர் சொல்லாட்சி==
முந்நீர் என்னும் சொல்லைக் கையாண்டு சங்கநூல் பாடல்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் இங்குத் தொகுப்பாக வைக்கப்படுகின்றன. முந்நீர் என்னும் சொல் கடலைக் குறிக்கும்.
 
இரண்டு வகை
பருக முடியாத கடல் முந்நீர், பருகும் முந்நீர் இரண்டும் வெவ்வேறு. முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயுந்து புறநானூறு 24
உப்பு-அமிழ்தம்
முந்நீர் தரும் உப்பை அமிழ்தம் என்பர். முந்நீர் பயந்த … வெண்கல் அமிழ்தம் அகநானூறு 207
தன்மை
முந்நீர் குளிர்திருக்கும். நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி புறநானூறு 66
முந்நீரின் ஆழம் அளக்க முடியாதது. இரு முந்நீர்க் குட்டம் புறநானூறு 20
முந்நீர் நீல்மட்டத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. கொளக் குறைபடாமையின் முந்நீர் அனையை பதிற்றுப்பத்து 90
முந்நீரில் செல்லல்
முந்நீரில் செல்லத் திமிலும் கரை பொரு முந்நீர்த் திமில் புறநானூறு 303 நாயாய்க் கப்பல்களும் முந்நீர் வழங்கும் நாவாய் புறநானூறு 13 கலன்-கப்பல்களும் நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5 பயன்படுத்தப்பட்டன.
முந்நீரில் செல்வோர் மகளிருடன் செல்வதில்லை. முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை தொல்காப்பியம் 3-37-1
வழிபாடு
முந்நீரில் தோன்றும் சுடரை மக்கள் வழிபடுவர். முந்நீர் மீமிசை பலர் தொழத் தோன்றிய சுடர் நற்றிணை 283
திருமால் முந்நீர் வண்ணம் கொண்டவன். முந்நீர் வண்ணன் பிறங்கடை (தொண்டைமான்) பெரும்பாணாற்றுப்படை 30 திருமால் ‘திரை பாடு அவிந்த முந்நீர் போன்ற வண்ணம் கொண்டவன் பரிபாடல் 4
செம்மை
அரசன் குடிமக்களுக்கு நீதி வழங்கும்போது முந்நீரின் நடுவில் தோன்றும் ஞாயிறு போல் விளங்குவான். முந்நீர் நாப்பண் பகல் செய்யும் மண்டிலம் போல் முறை செய்தான் (தொண்டைமான்) பெரும்பாணாற்றுப்படை 441
நெடுஞ்செழியன் அவ்வாறு முறை வழங்கினான். முந்நீர் நாப்பண் ஞாயிறு போல நெடுஞ்செழியன் விளங்கினான். மதுரைக்காஞ்சி 768
விழா
பாண்டிய அரசன் நெடியான் முந்நீர் விழாக் கொண்டாடினான். முந்நீர் விழவின் நெடியோன் புறநானூறு 9
வைகை நீராட்டு விழா முந்நீர் விழா போல இருந்தது. கரை பொருது இரங்கும் முந்நீர் போல – வைகையில் விழாக் கொண்டாடினர். மதுரைக்காஞ்சி 425
முழக்கம்
மதுரையில் முரசு முழங்கும் ஒலி முந்நீர் முழக்கம் போல இருந்தது. மா கால் எடுத்த முந்நீர் போல – மதுரையில் முரசு முழக்கம் கேட்டது மதுரைக்காஞ்சி 361
முந்நீரில் செல்ல உதவுவது காற்று. என் காதலர் விலங்கு இரு முந்நீர்க் காலில் செல்லார். எங்கே போனார்? குறுந்தொகை 130
முந்நீரில் செல்லும் கப்பல்களை காற்று கவிழ்க்கும். நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5
முந்நீரில் இரவில் செல்வோர் விளக்குச் சுடருடன் செல்வர். முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல புறநானூறு 60
குட்டுவன் … முந்நீர் முற்றி … பௌவம் நீங்க ஓட்டிய எஃகம் அகநானூறு 212
சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமையத்து … வணங்குவில் பொறித்து அகநானூறு 127
மூவேந்தரும் முந்நீரை ஏணி போல் பயன்படுத்தி வாணிகம் செய்து முன்னேறினர். முந்நீர் ஏணி விறல் கெழு மூவர் புறநானூறு 137 நளி இரு முந்நீர் ஏணியாக புறநானூறு 35
 
காதலி கூறுகிறாள்
திரை தரும் முந்நீர் வளாகம் எல்லாம் – ஞாயிறே, தேடு என்றேன். கலித்தொகை 146
முந்நீர் வெறும் மணலாக இறைப்பேன் … காற்றே! - கதிரே! – என் நலன் உண்டு துறந்தானைக் காட்டாயேல் – கலித்தொகை 144
விளக்கத் தொடர்கள் - நிலம்
இருள் நிற முந்நீர் வளைஇய உலகம் திருமுருகாற்றுப்படை 293
மாசு இல் வான் பரந்த முந்நீர்த் தொன்னிலம் கலித்தொகை 103
விரிதிரை முந்நீர் மண்திணிக் கிடக்கை அகநானூறு 379
முழங்கு இரு முந்நீர்த் திரை அகநானூறு 338
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா அகநானூறு 104
முந்நீர் உடுத்த வியன் உலகு புறநானூறு 382
முந்நீர் வரைப்பகம் புறநானூறு 363
வெண்திரை முந்நீர் வளைஇய உலகம் பதிற்றுப்பத்து 31
இரு முந்நீர்த் துருத்தி பதிற்றுப்பத்து 20
திரை பொரு முந்நீர்க் கடல் புறநானூறு 154
விளக்கத் தொடர்கள் – கடல்
முழங்கு முந்நீர் … ஞாலம் புறநானூறு 18
இரு முந்நீர் … பௌவம் மதுரைக்காஞ்சி 75, 235,
ஒலி முந்நீர் மதுரைக்காஞ்சி 2
இரங்கும் முந்நீர் … ஊர் அகநானூறு 400
==மேற்கோள் குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முந்நீர்_(சொல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது