இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு '''(2G spectrum scam) என [[2ஜி|இரண்டாம் தலைமுறை]] தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க [[இந்தியா|இந்திய]] அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குறைவாகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குறிப்பிடப்படுகின்றன. இதனை அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை உரிமங்களுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை ஒப்பிட்டு முதன்மைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் ஆய்வு அரசுக்கு ரூ.1,76,379 கோடிகள் ([[அமெரிக்க டாலர்|$]] 39 [[பில்லியன்]]) நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த உரிமங்கள் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டபோதும் இந்தக் கணக்கு ஆய்வின் அறிக்கையாலும் இந்திய வருமானவரித்துறை ஒட்டுக்கேட்ட [[நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை|நீரா ராடியா ஒலிநாடாக்களின் பொதுவெளி கசிவாலும்]] இது 2010ஆம்2010 ஆம் ஆண்டு இறுதியில் கவனம் பெற்றது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் [[ஆ. ராசா]] பதவி விலகினார்.
 
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்படுகின்றன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்கட்சிகளுக்கும் புலனாயும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாட்கள் இயங்காது அவை முடக்கப்பட்டது <ref>[http://economictimes.indiatimes.com/news/politics/nation/Parliament-logjam-led-to-wastage-of-over-146-crore/articleshow/7093296.cms இகனாமிக்சு டைம்சு செய்தி:நாடாளுமன்ற முடக்கத்தால் 146 கோடி இழப்பு ]</ref>. இந்திய ஊடகங்களின் ஈடுபாடும் எதிர்வினைகளும் பக்கச்சார்புடன் உள்ளமையும் உரையாடப்படுகிறது.