பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி fmt
No edit summary
வரிசை 2:
'''பழங்குடிகள்''' என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் [[மொழி]]யும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த [[செடி]], [[கொடி]], [[மரம்]], [[விலங்கு]]களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் [[தன்னிறைவு|தன்னிறைவோடு]] வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி [[கலை]]களும் [[கடவுள்]], [[சமயம்]], மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும்
கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், [[உறவு முறை]]களிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், [[பணம்|பணத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[பொருளாதாரம்]] இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். [[ஆஸ்திரேலியா]], [[வட அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]], [[இந்தியா]], [[ஜப்பான்]], [[பசிபிக் தீவு]]கள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 
==வரைவிலக்கணம்==
பழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineage) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.
 
[[பகுப்பு:பழங்குடிகள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/பழங்குடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது