கார்டானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3:
 
== வாழ்க்கை வரலாறு ==
[[File:Cardano - De propria vita, 1821 - 698063 F.jpg|thumb|''De propria vita'', 1821]]
 
கார்டானோ ஒரு அறிவியலாளர். அவர் [[பாடுவா]]வில் தன் 22வது வயதில் கற்ற [[கணிதம்|கணித]]த்தை மட்டும் தன் தொழிலாகக் கொள்ளவில்லை. 1526 இல் பாடுவாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். [[டென்மார்க்]], [[ஸ்காட்லாந்து]] முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அவருடைய புயல் போன்ற வாழ்க்கையில் எப்பொழுதும் பணத்தட்டுப்பாடு கொண்டு இருந்திருக்கிறார். ஒரு முறை [[பொலோனா]]வில் கடன் அடைக்காததால் சிறையிலும் இருந்திருக்கிறார். இவர் தன் பணத்தட்டுப்பாட்டைப் பெரும்பாலும் சூதாட்டத்திலும் [[சதுரங்க]] ஆட்டத்திலும் வென்று ஒருவாறு ஈடுகட்டியிருக்கிறார். விளையாட்டுகளில் வாய்ப்பு, [[நிகழ்தகவு]] போன்றவற்றைப் பற்றி லீபர் டெ லூடோ அலியே (''Liber de ludo aleae'') என்னும் இவர் 1560ல் எழுதிய [[நூல்]] இவர் இறந்தபிறகு 1663ல் வெளியாகியது. இதுவே முதன்முறையாக சீராக நிகழ்தகவு பற்றி எழுதிய நூல் ஆகும். இதில் ஏமாற்றும் முறைகள் பற்றியும் எழுதியுள்ளார்! இவர் [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]] நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். சில குறிப்பிடத்தக்க கணித வெளியீடுகளைத் தவிர, தத்துவம், மருத்துவம் இவையிரண்டிலும் வெளியீடுகள் செய்திருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/கார்டானோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது