ஈரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 75:
'''ஈரான்''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''ஈரான் இசுலாமியக் குடியரசு''' [[மேற்காசியா]]வில் உள்ள ஒரு நாடாகும். [[ஈராக்]], [[பாகிஸ்தான்]], [[ஆப்கானிஸ்தான்]] போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில. இதன் தலைநகரம் [[தெஹ்ரான்]]. இந்நாடு பண்டைக்காலத்தில் ''பாரசீகம்'' என்று அழைக்கப்பட்டது. "ஈரான்" என்னும் சொல் பாரசீக மொழியில் "ஆரியரின் நிலம்" எனப் பொருள்படும். சசானியக் காலத்தில் இருந்தே உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பெயர், 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.
 
{{convert|1648195|km2|abbr=on}} பரப்பளவுடன், பரப்பளவு அடிப்படையில் உலகின் 18 ஆவது பெரிய நாடாக விளங்கும் ஈரான், 78.4 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டது.<ref name="BBC">{{cite web |title=Iran Country Profile |publisher=BBC NEWS |url=http://www.bbc.co.uk/news/world-middle-east-14541327 |accessdate=8 August 2012}}</ref><ref name="britannica1">{{cite web | title = Iran | work =Encyclopædia Britannica | publisher =Encyclopædia Britannica | year =2012 | url =http://www.britannica.com/EBchecked/topic/293359/Iran | accessdate =8 August 2012}}</ref> ஈரானின் அமைவிடம் ஆசியாவின் மேற்கு, நடு, தெற்கு ஆகிய பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதனால், இந்நாட்டுக்குக் குறிப்பான ஒரு புவியியல்சார் அரசியல் முக்கியத்துவம் உண்டு. ஈரானின் வடக்கு எல்லையில், [[ஆர்மேனியா]], [[அசர்பைசான்]], [[துர்க்மெனிசுத்தான்துருக்மெனிஸ்தான்]] ஆகிய நாடுகள் உள்ளன. ஈரான் உள்நாட்டுக் கடலான கசுப்பியன் கடலோரமாக அமைந்திருப்பதால், [[கசாக்சுத்தான்]], [[உருசியா]] என்பனவும் இதற்கு நேரடி அயல் நாடுகளாக இருக்கின்றன. ஈரானின் கிழக்கு எல்லையில் [[ஆப்கானிஸ்தான்]], [[பாக்கிஸ்தான்]] என்பனவும், தெற்கில் [[பாரசீகக் கடல்]], [[ஒமான் வளைகுடா]] என்பனவும், மேற்கில் [[இராக்]]கும், வடமேற்கில் [[துருக்கி]]யும் அமைந்துள்ளன. தலைநகரான தெஹ்ரான் நாட்டின் மிகப் பெரிய நகரமாக உள்ளதுடன், நாட்டின் அரசியல், பண்பாட்டு, வணிக மற்றும் கைத்தொழில் மையமாகவும் விளங்குகிறது. ஈரான் ஒரு பிரதேச வல்லரசாக இருப்பதுடன்,<ref name="parliament">{{cite web|author=The Committee Office, House of Commons |url=http://www.publications.parliament.uk/pa/cm200607/cmselect/cmfaff/363/36310.htm |title=Select Committee on Foreign Affairs, Eighth Report, Iran |publisher=Publications.parliament.uk |accessdate=18 June 2011}}</ref><ref name="petro-hunt">[http://www.petro-hunt.com/lectures/LectureOpen.htm Iran @ 2000 and Beyond lecture series, opening address, W. Herbert Hunt, 18 May 2000]{{dead link|date=June 2011}}. Retrieved 1 October 2007.</ref> பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவற்றின் பெருமளவு இருப்புக் காரணமாக [[அனைத்துலக ஆற்றல் பாதுகாப்பு]], [[உலகப் பொருளாதாரம்]] ஆகியவை தொடர்பில் முக்கியமான இடத்தையும் வகிக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய உறுதிசெய்யப்பட்ட இயற்கைவாயு இருப்பும், நான்காவது பெரிய பெட்ரோலிய இருப்பும் ஈரானிலேயே உள்ளன.<ref name="CIA">{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ir.html|title=Iran|author=CIA World Factbook|accessdate=7 August 2012}}</ref>
 
ஈரான் உலகின் மிகப் பழைய நாகரிகம் ஒன்றின் இருப்பிடமாக விளங்கியது.<ref>Lowell Barrington, Michael J. Bosia, Kathleen Bruhn, "Comparative Politics: Structures and Choices", Cengage Learning, 2009. Excerpt from page 34: "Like China, Iran is home to one of the world's oldest civilizations"</ref> ஈரானின் முதலாவது வம்ச ஆட்சி கிமு 2800 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில், [[ஈலம்|ஈலமிய]] இராச்சியக் காலத்தில் உருவாகியது. கிமு 625ல் "மெடே"க்கள் ஈரானை ஒன்றிணைத்தனர்.<ref name="Encyclopædia Britannica Encyclopedia Article: Media ancient region, Iran">{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/372125/Media |title=Encyclopædia Britannica Encyclopedia Article: Media ancient region, Iran |publisher=Britannica.com |accessdate=25 August 2010}}</ref> இவர்களைத் தொடர்ந்து, ஈரானிய [[ஆக்கிமெடியப் பேரரசு]], [[எலனிய செலூசியப் பேரரசு]], [[பார்த்தியப் பேரரசு]], [[சசானியப் பேரரசு]] என்பன இப்பகுதியில் உருவாகின. கிபி 651ல் முஸ்லிம்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர்.ஈரானியப் பின்-இஸ்லாமிய வம்சங்களும், பேரரசுகளும், பாரசீக மொழியையும், பண்பாட்டையும் [[ஈரானியச் சமவெளி]] முழுவதும் விரிவடையச் செய்தன. ஈரானியரின் சுதந்திரத்தை மீளவும் நிலைநாட்டிய தொடக்ககால வம்சங்களுள் [[தகிரியர்]], [[சபாரியர்]], [[சமானியர்]], [[புயியர்]] போன்றோர் அடங்குகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஈரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது