கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மரபுவழி எச்சம்: *விரிவாக்கம்*
சி clean up, replaced: {{Link FA|ca}} → (3)
வரிசை 25:
[[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேரரசின்]] கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|நான்கு கடற்பயணங்களை]] அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் [[லா எசுப்பானியோலா]] தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் ''புதிய உலகம்'' என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய [[குடியேற்றவாதம்|குடியேற்றத்தைத்]] துவக்கின.
 
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய [[பேரரசுவாதம்|பேரரசுவாத]] போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். [[பகாமாசு|பகாமாசு தீவுக்கூட்டங்களில்]] தாம் பின்னர் ''சான் சால்வதோர்'' எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு [[பெரிய அண்டிலிசு|பெரிய]] மற்றும் [[சிறிய அண்டிலிசு]] தீவுகளையும் [[வெனிசுவேலா]], [[நடு அமெரிக்கா]]வின் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலோரப்]] பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை [[எசுப்பானியப் பேரரசு]]க்கு உரியதாக உரிமை கோரினார்.
 
கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே [[லீப் எரிக்சன்]] தலைமையேற்ற [[வைக்கிங்|நோர்சு]] குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.<ref>{{cite web|url=http://www.pc.gc.ca/eng/lhn-nhs/nl/meadows/index.aspx|title=Parks Canada – L'Anse aux Meadows National Historic Site of Canada|date=24 April 2009|accessdate=29 July 2009}}</ref>) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.<ref name="EB-online"/>
வரிசை 144:
[[File:ColumbusHouseOfValladolid.jpg|thumb|left|upright|அவரது வல்லாடோலிட் இல்லத்தில் கொலம்பசு தனது முதல் கடற்பயணத்தில் பயன்படுத்திய சான்ட்டா மாரியா கப்பலின் சிறுவடிவம்<ref>{{cite web|url=http://www.vanderkrogt.net/statues/object.php?webpage=CO&record=es098|title=Columbus Monuments Pages: Valladolid|accessdate=3 January 2010}}</ref>]]
[[File:Tumba de Colon-Sevilla.jpg|thumb|upright|[[செவீயா பெருங்கோவில்|செவீயா பெருங்கோயிலுள்ள]] கல்லறை. அவரது பூத உடலை காசுட்டைல், லியோன், அரகோன், நவரே அரசர்கள் தூக்குகின்றனர்.<ref>{{cite web|url=http://www.vanderkrogt.net/statues/object.php?webpage=CO&record=es093|title=Columbus Monuments Pages: Sevilla|accessdate=3 January 2010}}</ref>]]
மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரிசியோவின் உதவியுடன் கொலம்பசு இரு நூல்களை வெளியிட்டார்: தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எசுப்பானிய அரசு தரவேண்டிய உரிமைகளை விவரித்த ''புக் ஆவ் பிரிவிலேசசு'' (1502), தனது கடலோடிப் பயணங்களின் சாதனைகளை விவிலிய முன்மொழிதலாக கருதி எழுதப்பட்ட ''புக் ஆவ் பிரொபெசீசு'' (1505). <ref name=britannica />{{sfn|Froom|1950|p=2}}
 
புதிய நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அனைத்து இலாபத்திலிருந்தும் 10% தமக்கு சேர வேண்டும் என எசுப்பானிய அரசரை வேண்டினார்; ஆனால் ஆளுநர் பதவியிலிருந்து அவரை விலக்கிய பிறகு அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது என்று அரசர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். கொலம்பசின் மறைவிற்குப் பின்னரும் அவருடைய வாரிசுகள் அரசர் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மிக நீண்டதாக இருந்தது. இந்த வழக்குகள் ''கொலம்பிய சட்டவழக்குகள்'' (''pleitos colombinos'') எனப்படுகின்றன.
== உடல்நலக் கேடும் மறைவும் ==
தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார்; 41 அகவைகள் நிறைந்த கொலம்பசிற்கு அச்சமயம் [[கீல்வாதம்]] பற்றியது. தொடர்ந்த ஆண்டுகளில் [[இன்ஃபுளுவென்சா]] மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின.
 
கொலம்பசின் வாழ்முறையையும் நோய் உணர்குறிகளையும் கொண்டு தற்கால மருத்துவர்கள் அவருக்கு நேர்ந்தது கீல்வாதமல்ல என்றும் ''ரீய்ட்டரின் கூட்டறிகுறி'' என்றும் கருதுகின்றனர்.<ref name=UMD/><ref name=Hoenig>{{cite journal|last=Hoenig|first=LJ|title=The arthritis of Christopher Columbus|journal=The Archives of Internal Medinal|date=February 1992|volume=152|issue=2|pmid=1472175 |accessdate=11 August 2013|doi=10.1001/archinte.1992.00400140028008|pages=274–7}}</ref> ரீய்ட்டரின் கூட்டறிகுறி குடல் தொற்றுக்களால் ஏற்படும் ஓர் மூட்டு நோயாகும்; இது [[கிளமிடியா]] அல்லது [[கொணோறியா]] போன்ற பாலுறவு பரவு நோய்களிலிருந்தும் வந்திருக்கலாம். அவருடைய கடற்பயணங்களில் எங்காவது உணவு நச்சுமை தொற்றி இந்நோய் வந்திருக்கலாம் என டெக்சாசு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும் [[வாதவியல்|வாதவியலாளருமான]] மரு. பிராங்க் சி. ஆர்னெட் கருதுகிறார்.<ref name=UMD>{{cite web|title=Christopher Columbus Suffered From a Fatal Form of Arthritis|url=http://umm.edu/news-and-events/news-releases/2005/christopher-columbus-suffered-from-a-fatal-form-of-arthritis|publisher=University of Maryland School of Medicine|accessdate=11 August 2013}}</ref> <!-- AutoEd: rm unicode ctrl char w/no win-1252 mapping, intent unknown -->
வரிசை 163:
இதனால் தவறான உடலெச்சங்கள் அவானாவிற்கு மாற்றப்பட்டதோ என்ற குழப்பத்தை தீர்க்க சூன் 2003இல் [[செவீயா]]விலிருந்த உடலின் [[டி. என். ஏ.]] கூறுகள் கொலம்பசின் தம்பி, மகன் ஆகியோரின் டி. என். ஏ கூறுகளுடன் ஒப்பிடப்பட்டன. துவக்கத்தில் கொலம்பசின் வயதிற்கும் உடற்கட்டுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய அளவில் எலும்புகள் இல்லை எனத் தோன்றியது;<ref>{{cite web|last1=Tremlett|first1=Giles|title=Young bones lay Columbus myth to rest|url=http://www.theguardian.com/world/2004/aug/11/spain.science|work=The Guardian|accessdate=26 October 2014}}</ref> டி.என். ஏ கிடைப்பதும் கடினமாக இருந்தது; [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]]யின் சிறு கூறுகளே கிடைத்தன. இந்த [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]] கூறுகள் கொலம்பசின் உடன்பிறப்பின் கூறுகளுடன் ஒத்திருந்தன; இருவரும் ஒரே அன்னைக்குப் பிறந்தவர்களாக உறுதி செய்யப்பட்டது.<ref>{{cite web|title=DNA verifies Columbus' remains in Spain|url=http://www.nbcnews.com/id/12871458/|publisher=Associated Press|accessdate=26 October 2014}}</ref>
 
இச்சான்றும், பிற [[மானிடவியல்]], வரலாற்று பகுப்பாய்வுகளும் கொண்டு செவீயாவிலுள்ள எச்சங்கள் கொலம்பசினுடையதே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.<ref name="bare_url">{{Cite journal|last=Álvarez-Cubero|first=MJ|author2= Martínez-González, LJ; Saiz, M; Álvarez, JC; Lorente, JA|date=8 March 2010|url=http://scielo.isciii.es/scielo.php?pid=S1135-76062010000100002&script=sci_arttext|title=New applications in genetic identification|journal=Cuadernos de Medicina Forense|volume=16|issue=1–2|pages=5–18|issn=1135-7606|doi=10.4321/S1135-76062010000100002}}</ref> சான்ட்டோ டொமிங்கோவில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த உடலெச்சத்தை ஆய்வு செய்ய அகழ்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை; இதனால் அங்கிருப்பது கொலம்பசின் உடலின் பாகங்களாக என்பதை உறுதி செய்ய முடியவில்லை.<ref name="bare_url" /><ref name="autogenerated2006">[http://www.msnbc.msn.com/id/12871458/ DNA verifies Columbus' remains in Spain], ''[[அசோசியேட்டட் பிரெசு]]'', 19 May 2006</ref><ref name="bare_url" /> சான்டோ டொமிங்கோவில் இந்த கல்லறை "கொலம்பசு கலங்கரைவிளக்கத்தில்" (''Faro a Colón'') உள்ளது.
 
== கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் ==
வரிசை 188:
== நினைவுக் கொண்டாட்டம் ==
[[File:Columbus 1892 Issue-$5.jpg|thumb|<center>~ கிறித்தோபர் கொலம்பசு ~</center><center>ஐ.அ. கொலம்பிய பதிப்பு, 1893.</center>]]
1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது ''பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட்'' எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதனை ''டியா டெ லா ராசா'' எனக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் இது [[கொலம்பசு நாள்]] எனவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரின் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடப்படுகின்றது.
 
1893இல் [[சிக்காகோ]]வில் நடந்த [[உலக கொலம்பியக் கண்காட்சி]]யில் கொலம்பசு வந்திறங்கிய நானூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.<ref name="WDL">{{cite web |url = http://www.wdl.org/en/item/11369/ |title = Bird's-Eye View of the World's Columbian Exposition, Chicago, 1893 |website = [[உலக மின்னூலகம்]] |year = 1893 |accessdate = 17 July 2013 }}</ref> ஆறு மாதங்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 27 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வருகை தந்தனர்.
 
ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு 16 தபால்தலைகள் அடங்கிய [[நினைவுத் தபால்தலை|நினைவு தபால்தலைத்]] தொகுப்பை வெளியிட்டது; இவை கொலம்பசு, அரசி இசபெல்லா, மற்றும் அவரது கடற்பயணங்களின் வெவ்வேறு நிலைகளை குறித்தனவாக இருந்தன. ஒரு சென்ட் மதிப்பிலிருந்து 5 டாலர் மதிப்பில் இவை இருந்தன. இந்த நினைவுத் தபால்தலைகள் மிகவும் புகழ்பெற்று ஏராளமாக விற்கப்பட்டன. ஆறு மாதகாலத்தில் மொத்தமாக இரண்டு பில்லியன் தபால்தலைகள் விற்கப்பட்டன; இதில் இரண்டு சென்ட் மதிப்பிலான "கொலம்பசின் வந்திறங்கல்" தபால்தலை 72% ஆகும்.<ref>Haimann, Alexander T., "2-cent Landing of Columbus", Arago: people, postage & the post, National Postal Museum online, viewed 18 April 2014.</ref>
வரிசை 199:
அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக கொலம்பசு "அமெரிக்காவைக் கண்டறிந்தவர்" என்ற கருத்து இருப்பினும் உண்மையில் முதலில் கண்டறிந்தவர்கள் இங்கு பல காலமாக வாழ்ந்திருந்த [[அமெரிக்க முதற்குடிமக்கள்|உள்ளூர் குடிகளாகும்]]. கொலம்பசு முதல் ஐரோப்பியர் கூடக் கிடையாது; [[வைக்கிங்]]குகள் தான் முதலில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள். ஆனால் கொலம்பசு தான் அமெரிக்காவை ஐரோப்பாவில் பிரபலப்படுத்தியவர். மேற்கத்திய கவனத்திற்கு புதிய நிலப்பகுதியைக் கொண்டு வந்ததன் மூலம் [[புவி]]யின் இரு முதன்மையான நிலப்பகுதிகளுக்கிடையேயும் அங்கு வாழ்பவர்களிடையேயும் நிலைத்த தொடர்பை துவங்கி வைத்தார். வரலாற்றாளர் ''மார்ட்டின் துகார்டு'' "கொலம்பசின் பெருமை அமெரிக்காவை முதலில் சென்றடைந்தவர் என்பதல்ல, அங்கு முதலில் தங்கியவர் என்பதாகும்" எனக் கூறியுள்ளார்.<ref name=dugard>Dugard, Martin. [[The Last Voyage of Columbus]]. Little, Brown and Company: New York, 2005.</ref>
 
கொலம்பசு தாம் கண்டறிந்த நிலப்பகுதி ஆசியாவின் அங்கமென்றே இறுதி வரை எண்ணியிருந்ததாக வரலாற்றாளர்கள் பொதுவாக கருதியபோதும்<ref>{{cite book | title=North America: the historical geography of a changing continent | author1=Thomas F. McIlwraith | author2=Edward K. Muller | publisher=Rowman & Littlefield | year=2001 | isbn=978-0-7425-0019-8 | url=http://books.google.com/books?id=8NS0OTXRlTMC&pg=PA35 | page=35}}</ref> கிர்க்பாட்றிக் சேல் கொலம்பசின் ''புக் ஆவ் பிரிவிலேஜசில்'' புதிய கண்டத்தைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டுகிறார்.<ref>Sale, Kirkpatrick (1991). ''The Conquest of Paradise: Christopher Columbus and the Columbian Legacy'', pp. 204–209</ref> தவிரவும், மூன்றாம் கடற்பயணத்தின் பதிவேடுகளில் "பரியா நிலம்" , "இதுவரை காணாத" கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.<ref name="Zeruvabel2003">{{cite book | title=Terra cognita: the mental discovery of America | author1=Eviatar Zerubavel | publisher=Transaction Publishers | year=2003 | isbn=978-0-7658-0987-2 | pages=90–91 | url=http://books.google.com/books?id=YkLCiKN0x4UC&pg=PA90}}</ref> அதேவேளையில் கொலம்பசின் மற்ற ஆவணங்களில் சியாவை சென்றடைந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்; 1502இல் [[ஆறாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டருக்கு]] எழுதியக் கடிதத்தில் கூபா ஆசியாவின் கிழக்குக் கடலோரம் எனக் குறிப்பிட்டுள்ளார். <ref>Phillips, William D., and Carla Rahn Phillips. ''The Worlds of Christopher Columbus.'' Cambridge: Cambridge University Press, 1992, p. 227.</ref> மேலும் புதிய கண்டமான தென்னமெரிக்கா ''ஓரியன்ட்டின் இறுதியிலிருக்கும் பூலோக சொர்க்கம்'' என்றார்.<ref name="Zeruvabel2003"/> எனவே, அவருடைய உண்மையான கருத்துக்கள் என்னவென்று அறுதியாகத் தெரியவில்லை.
 
[[File:1893 Nina Pinta Santa Maria replicas.jpg|thumb|[[உலக கொலம்பியக் கண்காட்சி]]க்கு எசுப்பானியாவிலிருந்து பயணித்த ''நினா'', ''பின்டா'', ''சான்டா மாரியா'' கப்பல்களின் நகல்கள்.]]
வரிசை 330:
[[பகுப்பு:1506 இறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|ca}}
{{Link FA|de}}
{{Link FA|he}}
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது