கிளாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
சி clean up, replaced: {{Link FA|af}} → (2)
வரிசை 55:
'''கிளாசுக்கோ''', '''கிளாஸ்கோ''' (''Glasgow'') [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்திலுள்ள]] மிகப் பெரிய நகரமும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மூன்றாவது மிகக்கூடிய மக்கள்தொகையுள்ள நகரமுமாகும். [[விக்டோரியா காலம்|விக்டோரியா காலத்தில்]] [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது.<ref>{{cite web| url=http://www.bbc.co.uk/history/scottishhistory/victorian/trails_victorian_glasgow.shtml| title=Victorian Glasgow| accessdate=14 September 2010|publisher=BBC History}}</ref><ref>{{cite web| url=http://www.theglasgowstory.com/storyd.php| title=Second City of The Empire: 1830s to 1914| author=Fraser, W, H| accessdate=7 January 2008|publisher=University of Glasgow}}</ref><ref>{{cite web| url=http://www.scotland.org/about/innovation-and-creativity/features/culture/vibrant6-glasgow.html| title=Glasgow&nbsp;— city of reality| author=McIlvanney, W| accessdate=7 January 2008|publisher=Scotland&nbsp;— the official online gateway}}</ref> இப்பொழுது [[ஐரோப்பா]]வின் முதன்மையான இருபது [[வணிகம்|வணிக]] நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 3,395 நபர்களாக இருந்தது.<ref name="Dense">{{cite web|title=News: Census 2011: Population estimates for Scotland|url=http://www.nas.gov.uk/about/121217.asp|work=The National Archives of Scotland|publisher=The National Records of Scotland|accessdate=17 October 2013|date=17 December 2012}}</ref> இசுக்காத்திய மேற்கு மத்திய தாழ்நிலங்களில் [[கிளைடு ஆறு|கிளைடு ஆற்றங்கரையில்]] இந்த நகரம் அமைந்துள்ளது. இந்நகர மக்கள் '''கிளாசுவேனியர்கள்''' எனப்படுகின்றனர்.
 
கிளைடு ஆற்றங்கரையில் சிறிய குடியிருப்பாகத் துவங்கி இன்று பிரித்தானியாவின் மிகப்பெரும் கடற் துறைமுகங்களில் ஒன்றாக கிளாசுக்கோ விளங்குகின்றது. பேராயரிடமாகவும் பின்னர் அரச சிற்றூராகவும் இருந்த கிளாசுக்கோவில் கிளாசுக்கோ பல்கலைக்கழகம் 15ஆவது நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 18ஆம் நூற்றாண்டிலிருந்து நகர வளர்ச்சி விரைவாக நடைபெற்றது. அத்திலாந்திக்குப் பெருங்கடல் வழியாக பிரித்தானியாவின் வணிகம் பிரித்தானிய அமெரிக்காவிற்கும் (வட அமெரிக்கா) பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடைபெற இத்துறைமுக நகரம் முக்கியப் பங்காற்றியது.
 
[[தொழிற்புரட்சி]]யை அடுத்து இந்த நகரத்தின் மக்கள்தொகையும் பொருளியல் நிலையும் வளர்ச்சியுற்று வேதிப்பொருட்கள், துணிகள் மற்றும் பொறியியல் நுட்பங்களுக்கு உலகின் சிறந்த மையமாக உருவானது. குறிப்பாக, கப்பல் கட்டுதல், கடல்வழிப் பொறியியல் சிறப்பாக நிலைபெற்று புகழ்பெற்ற கப்பல்கள் இங்கு கட்டப்பட்டன. ஐரோப்பாவின் முதல் பத்து நிதி மையங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.<ref>{{cite web| url=http://www.ifsdglasgow.co.uk/news/latest-news/glasgow-enters-european-top-ten| title=Global Financial Centres Index 10: Glasgow Enters European Top Ten| accessdate=8 June 2012}}</ref> இசுக்கொட்லாந்தின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமையகம் கிளாசுக்கோவில் தான் அமைந்துள்ளது. உலகில் மிகவும் வாழத்தகுந்த இடங்களின் வரிசையில் 57வது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|author=Česky |url=http://en.wikipedia.org/wiki/List_of_cities_by_quality_of_living |title=List of cities by quality of living - Wikipedia, the free encyclopedia |publisher=En.wikipedia.org |accessdate=25 August 2011}}</ref>
 
[[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்போட்டிகளை]] கிளாசுக்கோ ஏற்று நடத்துகின்றது. [[சங்கக் கால்பந்து|காற்பந்தாட்டம்]] கிளாசுக்கோவில் பரவலாக விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது.
 
== வரலாறு ==
வரிசை 122:
===பொதுப் போக்குவரத்து ===
[[File:AM Glasgow Central.JPG|thumb|மேற்கு கடலோர முதன்மைத் தடத்தின் வடக்கு முனையமான கிளாசுக்கோ சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்.]]
கிளாசுக்கோவில் பெரும் நகரியப் போக்குவரத்து அமைப்பு உள்ளது; இதனை ''போக்குவரத்திற்கான இசுட்ராத்கிளைடு கூட்டாளிகள்'' (SPT) மேலாண்மை செய்கிறது.
 
நகரத்தில் பல பேருந்து சேவைகள் உள்ளன; தனியார்மயமாக்கலுக்குப் பிறகு இவற்றை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. முதன்மை பேருந்து முனையமாக ''புச்சானன் பேருந்து நிலையம்'' செயலாற்றுகிறது.
 
ஐக்கிய இராச்சியத்திலேயே [[இலண்டன்|இலண்டனுக்கு]] அடுத்தநிலையில் மிகவும் விரிவான நகரியத் தொடர்வண்டி அமைப்பையும் கிளாசுக்கோ கொண்டுள்ளது. பெரும்பாலான தொடர்வண்டித் தடங்கள் [[பிரித்தானிய ரெயில்]] நிறுவனத்தின் கீழ் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இசுக்காட்லாந்தினுள் ஓடும் அனைத்து தொடர்வண்டிகளும் இசுக்காட்டிய அரசின் உரிமம் பெற்ற ''பர்ஸ்ட் இசுகாட்ரெயிலால்'' இயக்கப்படுகின்றன. ''கிளாசுக்கோ சென்ட்ரல் நிலையமும்'' ''கிளாசுக்கோ குயீன் இசுட்ரீட்டு தொடர்வண்டி நிலையமும்'' முதன்மையான முனையங்களாகும். இலண்டன் ஈசுட்டன் நிலையத்திலிருந்து {{convert|641.6|km|mi|adj=on}} தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மேற்கு கடலோர முதன்மைத் தடம் கிளாசுக்கோ சென்ட்ரலில் முடிகிறது; இங்கிலாந்திற்கான அனைத்து சேவைகளும் இந்த நிலையத்திலிருந்தே இயக்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.railway-technology.com/projects/virgin/ |title=West Coast Main Line Pendolino Tilting Trains, United Kingdom |publisher=Railway-technology.com |accessdate=25 August 2011}}</ref> இசுகாட்லாந்திற்கான பெரும்பாலான சேவைகள் மற்ற நிலையமான குயீன் இசுட்ரீட்டு நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
 
நகரத்தின் நகர்புறத் தொடரமைப்பு கிளைடு ஆற்றின் இருபுறமுமாக பிரிவுபட்டுளது; இவற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ள கிராசுரெயில் கிளாசுக்கோ திட்டம் இசுகாட்டிய அரசின் நிதி வழங்கலுக்காகக் காத்திருக்கிறது. நகர்புற தொடர்வண்டிகளைத் தவிர எஸ்பிடி [[கிளாசுக்கோ சப்வே]]வையும் இயக்குகிறது. ஐக்கிய இராச்சியத்தில் முழுமையும் புவிக்கடியில் இயங்கும் விரைவுப் போக்குவரத்து அமைப்பாக கிளாசுக்கோ சப்வே விளங்குகிறது.<ref>{{cite web|author=SPT |url=http://www.spt.co.uk/subway/facts.html |title=SPT Subway |publisher=Web.archive.org |date=16 April 1980 |accessdate=12 September 2009 |archiveurl = http://web.archive.org/web/20071229231523/http://www.spt.co.uk/subway/facts.html |archivedate = 29 December 2007}}</ref>
 
{{wide image|Central station panoramic.JPG|700px|கிளாசுக்கோ நடுவண் தொடர்வண்டி முனையத்தின் காட்சி (இடப்புறத்தில் தனித்துவமான ''எய்லான்மேன்சு குடையின்'' முகப்பைக் காணலாம்)}}
வரிசை 135:
கிளாசுக்கோவின் இருபுறங்களுக்குமிடையே இயக்கப்பட்டு வந்த படகுப் போக்குவரத்து பாலங்களும் நீரடி துளைவழிகளும் அமைக்கப்பட்ட பிறகு தமது முதன்மையை இழந்துள்ளன. உலகின் கடைசி [[துடுப்பு நீராவிக் கப்பல்]] சேவையான ''பிஎஸ் வேவர்லி'' கிளாசுக்கோ நகர மையத்திலிருந்து பொழுதுபோக்குக்கான கடற்பயணங்களை மேற்கொள்கிறது. நகரத்தில் இன்றும் செயல்படும் துறைமுகத் துறையாக கிங் ஜார்ஜ் V டாக் பீல் குழுமத்தால் இயக்கப்படுகிறது. கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ள முனையங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொள்கலங்கள் மூலம் 7.5&nbsp;மில்லியன் டன் சரக்குகள் மேலாளப்படுகின்றன. இங்கிருந்து பல ஐரோப்பிய நகரங்களுக்கும் நடுக்கடல் மற்றும் பால்டிக் துறைமுகங்களுக்கும் வணிக கப்பல் போக்குவரத்து [[எப்ரைட்சு கடல்]] வழியே நடைபெறுகிறது.<ref>C.Michael Hogan, (2011) [http://www.eoearth.org/article/Sea_of_Hebrides?topic=49523 ''Sea of the Hebrides'']. Eds. P. Saundry & C.J.Cleveland. Encyclopedia of Earth. National Council for Science and the Environment. Washington DC.</ref>
 
[[File:Wfm m8 motorway.jpg|thumb|இசுக்காட்லாந்தின் மிகவும் போக்குவரத்து மிக்க [[எம்8 விரைவுச்சாலை| எம்8 மோட்டார்வே]]]]
===சாலைகள்===
முதன்மையான எம்8 விரைவுச்சாலை நகர மையத்தின் வழியேச் செல்கிறது; எம்77 , எம் 73, எம் 80 விரைவுச்சாலைகளுடன் இணைக்கிறது. ஏ 82 விரைவுச்சாலை அர்கிலுடனும் உயர்நிலங்களுடனும் இணைக்கிறது. எம் 74 நெடுஞ்சாலை தெற்கில் கார்லிசலுடன் இணைக்கிறது.
வரிசை 161:
* [http://www.clydewaterfronteducation.com/ Clyde Waterfront Education]
* [http://www.ifsdglasgow.co.uk/ International Financial Services District Glasgow]
 
[[பகுப்பு:இசுக்காட்லாந்து நகரங்கள்]]
 
{{Link FA|af}}
{{Link FA|ru}}
{{Link FA|sco}}
"https://ta.wikipedia.org/wiki/கிளாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது