கே. எஸ். கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள்கள் இல்லை
வரிசை 1:
{{unreferenced}}
கே.எஸ்.ஜி என சுருக்கமாகத் திரையுலகில் அழைக்கப்பட்ட கே. எஸ். கோபாலகிருஷ்ணன் (K.S.Gopalakrishnan), 1950ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960ஆம் ஆண்டுகள் துவங்கி 1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
 
=சிறுவாழ்க்கைக் குறிப்பு=
 
=சிறு குறிப்பு=
 
தற்போதைய [[நாகப்பட்டிணம்]] மாவட்டம் [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள [[மல்லியம்]] என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
 
[[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பல நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற பல நடிகைகளையும் வெற்றிகரமாக இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்துள்ளார்.
 
பின்னாட்களில் [[கமலஹாசன்]] நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய [[பாரதிராஜா]], [[மகேந்திரன்]], [[ பாலுமகேந்திரா]] போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன. இவற்றுடன், தமிழ்த் திரையுலகில் கே.எஸ்.ஜியின் சகாப்தம் ஏறத்தாழ முடிந்து விட்டதாகவே அமைந்தது. இருப்பினும், அவரது ஆரம்பகால மற்றும் அறுபதுகளில் இயக்கிய திரைப்படங்களுக்காக அவரது புகழ் இன்றளவும் மங்காதே திகழ்கிறது.
 
=சிறப்பியல்புகள்=
வரிசை 25:
 
=சில புகழ் பெற்ற திரைப்படங்கள்=
 
* பணமா பாசமா
* உயிரா மானமா
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது