திருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
}}
 
'''திருக்கை''' (''Batoidea'') என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை [[மீன்]] என்று அழைப்பர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக [[சுறா மீனை]]ப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் (நீண்மையுடைய) [[குருத்தெலும்பு]] கொண்டது. இவற்றுள் சில [[மின்மம்|மின்சாரம்]] பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லதுவல்லவை இவை [[மின்திருக்கை]] எனப்படுகின்றன. சில திருக்கைகள் மாந்தனைக் கூட கொல்லும் அளவுக்கு வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி [[தமிழ்|தமிழில்]] நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று [[உயிரியல்]] அறிஞர்கள் அண்ணளவாக 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர்.
 
மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை<ref>tஇவ்வினம் அடங்கி இருக்கும் துணைவகுப்பின் ஆங்கில அறிவியற்பெயரில் உள்ள பிராங்க்கியி (branchii) என்னும் சொல் செதில் என்னும் பொருள் கொண்டிருப்பினும்</ref>. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் (உகைத்துச் செல்லும்) தன்மை கொண்டது. பிற உயிரினங்களை வேட்டையாடும் மீன் இனங்களில் ஒன்றாகக் திருக்கைகள் கருதப்படுகின்றன. திருக்கை தான் செல்ல நினைக்கும் இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது நீண்ட வாலை பயன்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது