மாற்கு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
எவ்வாறாயினும் மாற்கு நற்செய்தி கி.பி. சுமார் 70ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர் பெரும்பான்மையோர் முடிவுசெய்துள்ளனர்.
 
மாற்கு என்று அழைக்கப்படுபவர் முதல் நற்செய்தியை எழுதினார் என்பதன் பொருள் என்ன? இயேசுவின் பொதுப்பணி பற்றியும் பாடுகள் சாவு பற்றியும் அமைந்திருந்த பல கூற்றுத்தொடர்களை இணைத்து ஒருங்குவித்துக் கோவையான ஒரு பெரும் கூற்றுத்தொடராக இந்நூலை மாற்கு வடிவமைத்தார் என்பதே பொருள். ஏற்கெனவேஏற்கனவே வழக்கிலிருந்த வாய்மொழி மற்றும் எழுத்துவடிவ மூலங்களைப் பயன்படுத்தி மாற்கு இந்நூலை வடித்தார். நாசரேத்து இயேசு பற்றி வழக்கிலிருந்த பல கூற்றுத்தொடர்களைத் தொகுத்து, ஒரு மையக் கருவும் அமைப்பு வரைவும் அளித்து, இசைவான விதத்தில் ஒழுங்குபடுத்தியவர் அவரே.
 
மேற்கூறியது இலக்கிய வகை சார்ந்த செயல் என்றால், மாற்கு தமது நூலைப் பெறவிருந்த கிறிஸ்தவ சமூகத்தை ஊக்குவிக்கும் நோக்குடனும் நற்செய்தி நூலைத் தொகுத்தார். ஏனென்றால், உரோமையில் வாழ்ந்த அந்தப் பிற இன-கிறிஸ்தவ சமூகம் துன்பத்துக்கு ஆளாகியிருந்தது; அந்த இக்கட்டான சூழமைவில் அச்சமூகத்துக்கு இயேசுவை முன்னுதாரணமாக இந்நற்செய்தி காட்டுகிறது. எவ்வாறு இயேசு இறுதிவரை நிலைத்துநின்றாரோ, அதுபோல மாற்குவின் கிறிஸ்தவ சமூகமும் துன்பச் சூழலில் துவண்டுவிடாமல் நிலைநிற்க வேண்டும்; ஏனென்றால் தம் சிலுவைச் சாவின் வழியாக இயேசு மக்களுக்கு மீட்புக் கொணர்ந்துவிட்டார்.
வரிசை 144:
=== இயேசு யார்? ===
 
''யார் இந்த இயேசு?'' - இந்தக் கேள்வி மாற்குவுக்கு முக்கியமானது. இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் நற்செய்தி முழுவதுமே அமைந்துள்ளது என்றுகூடச் சொல்லலாம். இயேசுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புப் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|பெயர்கள்]] மாற்குவின் சமூகத்திற்கு ஏற்கெனவேஏற்கனவே தெரிந்திருந்தன. அவை '''மானிடமகன்''', '''தாவீதின் மகன்''', '''இறைமகன்''', '''மெசியா''', '''ஆண்டவர்''' போன்றவை ஆகும். எனவே இயேசு கடவுளின் ஆட்சியை அறிவிக்க வந்தார் என்பதை எடுத்துக் கூறுவதில் மாற்கு கவனத்தைச் செலுத்துகிறார். "யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று அவர் கூறினார்" (மாற் 1:14-15).
 
இயேசுவின் பொதுப் பணிக் காலம் முழுவதும் அவர் அதிகாரத்தோடு போதிப்பதைப் பார்க்கிறோம். வல்லமையோடு [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] பல நிகழ்த்துவதையும் காண்கின்றோம். என்றாலும், இயேசுவின் பணியை வரையறுக்கும் இந்த அம்சங்களை நாம் அவரது சிலுவைச் சாவின் ஒளியில்தான் சரிவரப் புரிந்துகொள்ள முடியும். இயேசு ''மெசியா'' என்பது அவரது பாடுகள், மரணம் ஆகியவற்றின் ஒளியில்தான் தெளிவுபெறுகிறது. இந்த விதத்தில் மெசியா உண்மையில் யார் என்பதை மாற்கு கூறும் இயேசுவின் வரலாற்றுக் கதை நமக்கு ஐயமற விளக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மாற்கு_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது