சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
 
ஜான் ஈ. மிச்சினர் இவ்வாறான சில வாசிப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ராவினுடைய வாசிப்பு ஓரளவுக்கு முறையான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், பெருமளவு தற்சார்பு கொண்டதாகவும், இந்திய-ஐரோப்பிய மொழி அடிப்படையை விளக்குவதில் இது நம்பத்தக்க முயற்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.<ref>J.E. Mitchiner: ''Studies in the Indus Valley Inscriptions'', p.5, with reference to S.R. Rao: ''Lothal and the Indus Civilisation'' (ch.10), Bombay 1978.</ref>
 
பிந்திய அரப்பா வரிவடிவங்களின் மிகப் பொதுவாகக் காணப்படும் 10 குறிகள், பிராமி எழுத்துக் குறியீடுகளுடன் வடிவ அடிப்படையில் பெருமளவு ஒத்திருப்பது, சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பிராமிக்கும் இடையே ஒரு தொடர்ச்சி இருப்பதற்கான சான்றாகக் காட்டப்படுகிறது.<ref>Kak, S. (1988). A frequency analysis of the Indus script. Cryptologia 12: 129-143. http://www.ece.lsu.edu/kak/IndusFreqAnalysis.pdf</ref> எண்களின் பயன்பாட்டிலும் இவ்வாறான தொடர்ச்சிக்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.<ref>Kak, S. (1990). Indus and Brahmi - further connections, Cryptologia 14: 169-183.</ref><ref>{{Citation |first=Subhash | last=Kak| title=The evolution of early writing in India| journal=Indian Journal of History of Science |volume=28| pages=375–388| year=1994|url=http://www.ece.lsu.edu/kak/writ.pdf}}</ref> இவ்விரு எழுத்துமுறைகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த தாஸ் என்பவரின் புள்ளியியல் ஆய்வுகளும் மேற்படி தொடர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.<ref>Das, S., Ahuja, A., Natarajan, B., Panigrahi, B.K. (2009)
Multi-objective optimization of Kullback-Leibler divergence between Indus and Brahmi writing. World Congress on
Nature & Biologically Inspired Computing, 2009. NaBIC 2009.
1282 - 1286. ISBN 978-1-4244-5053-4</ref>
 
சமஸ்கிருதக் கொள்கையின் ஆதரவாளர்கள், [[சமஸ்கிருதம்]] [[இந்தியா]]விலேயே தோன்றி வளர்ந்ததென்று காட்டமுற்படுகிறார்கள். ஆனால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சான்றுகளின்படி சிந்துவெளி வரிவடிவங்களில் [[தமிழ் பிராமி]] வரிவடிவங்களை நோக்கிய வளர்ச்சி காணப்படுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். இக் கடைசிக் கூற்றுச் சரியாயின், தமிழ் பிராமி எழுத்துக்களே [[முதல்நிலைத் திராவிட மொழி]]யொன்றுக்காகத் தோன்றியிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சான்று. இன்றைய அளவில் அது நிருபணம் செய்யப்பட்டும் விட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது