அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==வரலாற்றில் அறை வகைகள்==
தொடக்ககாலக் கட்டிடங்களில், குறிப்பாக வாழிடக் கட்டிடங்களில் [[படுக்கையறை]]கள், [[சமையலறை]]கள், [[குளியலறை]]கள், [[வரவேற்பறை]]கள், வேறும் பிற சிறப்புப் பயன்பாடுகளுக்கான அறைகளை அடையாளம் காணமுடியும். மினோவன் பண்பாட்டைச் சேர்ந்த அக்குரோத்திரியில் இடம்பெற்ற அகழ்வாய்வுகள், [[படிக்கட்டு]]கள் பொருத்தப்பட்டு ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த அறைகள் இருந்ததைக் காட்டுகின்றன. [[குளிர்நீர்]], [[சுடுநீர்]] ஆகியவற்றின் விநியோகத்துக்காக வெண்களிமத்தினால் செய்யப்பட்ட குளாய்கள் பொருத்தப்பட்ட [[கழுவு கிண்ணம்|கழுவு கிண்ணங்கள்]], [[குளியல்தொட்டிகுளியல் தொட்டி]]கள் என்பவற்றோடு கூடிய குளியல் அறைகளும்[[குளியலறை]]களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<ref name="Akrotiri" />
 
எனினும், சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான பழையகாலக் கட்டிடங்களில் அறைகள் பெரும்பாலும் பல்பயன்பாட்டுக்கானவை. நாகரிக வளர்ச்சி காரணமாக கட்டிடங்களின் பயன்பாட்டுச் சிக்கல்தன்மை அதிகரித்தபோது, சிறப்புப் பயன்பாடுகளுக்கான அறைகளின் தேவையும் அதிகரித்தது எனலாம். தற்காலத்தில், [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] மேம்பாட்டினால், பல துறைகளிலும் புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவத்துறை, கல்வித்துறை, தொழிற்றுறை, விருந்தோம்பற்றுறை போன்ற பல்வேறு துறைகளுக்கான கட்டிடங்களில், புதிய சாதனங்களுக்கும், வசதிகளுக்கும் இடமளிப்பதற்காகச் சிறப்பு அறைகள் தேவைப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1912042" இருந்து மீள்விக்கப்பட்டது