தாய்லாந்தின் பாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 52:
|சாங்||ชั่ง||20 டாம் லுயுங்||80||
|}
இந்த முறை 1897 வரை செயற்பாட்டில் இருந்தது; அந்தாண்டில் இளவரசர் ''ஜயந்தா மொங்கோல்'' பதின்ம முறையை பரிந்துரைத்தார். இதனை ஏற்று 1 பாட்டிற்கு 100 சடாங்குகளாக அரசர் சுலாலோங்கோம் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் பழைய மரபு நாணயங்களும் 1910 வரை வெளியிடப்பட்டன. இன்றும் 25 சடாங்கு நாணயம் ''சா லுயுங்'', என அழைக்கப்படுகின்றது.
 
நவம்பர் 27, 1902இல் பாட்டின் மதிப்பு வெள்ளியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 15 கிராம் வெள்ளி ஒரு பாட்டாக இருந்தது. இதனால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாணயங்களுடன் பாட்டின் மதிப்பு வேறுபட்டுக்கொண்டு வந்தது. 1857இல் சில வெளிநாட்டு வெள்ளி நாணயங்களுக்கு எதிர் பாட்டின் மதிப்பு சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காட்டாக, ஒரு பாட் = 0.6 வளைகுடா டாலர் மற்றும் ஐந்து பாட் = ஏழு [[இந்திய ரூபாய்]]கள். 1880க்கு முன்பாக [[பிரித்தானிய பவுண்டு]]க்கு எட்டு பாட்டுக்களாக மாற்று வீதம் நிச்சயிக்கப்பட்டது. இது 1880களில் 10 பாட்டுகளாக மதிப்புக் குறைந்தது.
 
1902இல் தங்கத்திற்கு எதிராக வெள்ளியின் விலையை உயர்த்துவதின் மூலம் பாட்டின் மதிப்பைக் கூட்டியது; ஆனால் வெள்ளி விலை வீழ்ந்தபோது அரசு பாட்டின் மதிப்பைக் குறைக்கவில்லை. ஒரு [[பிரித்தானிய பவுண்டு]]க்கு 21.75 பாட்டாகத் துவங்கி நாணய மதிப்புக் கூடத் தொடங்கியது. 1908இல் இது 13ஆகவும் 1919இல் 12 பாட்டாகவும் 1923இல் 11 பாட்டாகவும் குறைந்தது. [[இரண்டாம் உலகப் போர்]] போது ஒரு பாட்டின் மதிப்பு ஒரு [[யென்]]னுக்கு இணையாக இருந்தது.
 
1956இல் [[அமெரிக்க டாலர்|அமெரிக்க டாலருடன்]] இணைக்கப்பட்டு 1973 வரை டாலருக்கு 20.8 பாட்டாக இருந்தது. பின்னர் 1978 வரை டாலருக்கு 20 பாட்டாக இருந்தது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியால் 1984இல் இது டாலருக்கு 25 பாட்டாக ஆனது. [[1997 ஆசிய நிதி நெருக்கடி]]க்குப் பின்னர் நடப்புச் செலாவணி வீதத்திற்கு மாறியது. இதன் மதிப்பு 1998இல் டாலருக்கு 56 பாட்டாக வீழ்ந்தது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாய்லாந்தின்_பாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது