பார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
18ம் நூற்றாண்டின் இறுதியில், "பார்க்" என்னும் பெயர், ஒரு குறித்த வகையான பாய்த் திட்டம் கொண்ட எந்தவொரு கப்பலையும் குறிக்கப் பயன்பட்டது. இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களையும், பின் பாய்மரத்தில் முன்-பின் பாயமைப்பும், ஏனைய பாய்மரங்களில் குறுக்குப் பாயமைப்பும் கொண்டதாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் பாய்க்கப்பல்களின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் காலத்தில் "பார்க்" கப்பல்கள் முக்கிய பங்காற்றின. குறைந்த பணிக்குழுவுடன் இயங்கிய போதிலும், கடல்வழிகளைக் கண்டடைவதில் [[முழுப் பாயமைப்பு]]க் கப்பல்களுக்கு இணையாக இவை விளங்கின.
 
உழைப்புச் செறிவு கொண்ட குறுக்குப் பாய்கள் குறைவாக இருப்பதால், முழுப் பாயமைப்புக் கப்பல்கள், "பிரிக்" பாயமைப்புக் கப்பல்கள் ஆகியவற்றைவிடக் குறைந்த பணிக்குழுவுடன் இயங்க முடிவது "பார்க்" கப்பல்களின் சாதகமான தன்மைகளுள் ஒன்று. இவற்றின் பாயமைப்பும் செலவு குறைவானது. இசுக்கூனர், பாக்கென்டைன் போன்ற கப்பல்களைவிடத் திறமையாகச் செயற்படக்கூடிய "பார்க்", கையாள்வதற்கு இலகுவானதும், காற்றின் திசையில் செல்வதற்கு முழுப் பாயமைப்புக் கப்பல்களிலும் சிறந்ததுமாகும். பொதுவாக முழுப் பாயமைப்புக் கப்பல்களே அக்காலக் கப்பல்கள் அனைத்திலும் சிறந்தது எனினும், முன்-பின் பாயமைப்புக் கப்பல்களே காற்றின் திசையில் செல்ல மிகவும் உகந்தவை. இதனால், இரண்டினதும் சிறப்புக் கூறுகளைக் கொண்ட "பார்க்" நல்ல இணக்கமான தீர்வாக அமைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/பார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது