பேரரசர் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Napoli_BW_2013-05-16_16-24-01_DxO.jpg with File:Napoli_BW_2013-05-16_16-24-01.jpg (by CommonsDelinker because: File renamed:).
வரிசை 158:
இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.
 
கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், ஸ்வாத்[[சுவத் மாவட்டம்|சிவாத்]] மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது.
 
பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது.
வரிசை 164:
கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி ''அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அழிக்காவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார்'' என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.
 
இதன் பிறகு அலெக்ஸாண்டர் [[சிந்து நதி]]யை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் [[பஞ்சாப்]] பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் [[போரஸ்|போரஸை]] வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.
 
மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு '''சத்ரப்''' எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார்.
வரிசை 178:
அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர்.
 
இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர். மேலும் இந்த ஆற்றை கடக்கையில் வெகுவானோர் இறக்க நேரிடும் என்றும் மறுகரையில் கண்டேரி மற்றும் ப்ரேசி போன்ற அரசர்களிடம் எண்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படையும், இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், எட்டு ஆயிரம் தேர்ப்படையும், மேலும் ஆறாயிரம் யானைப்படையும் கொன்றகொண்ட மிகப்பெரிய படையணிகள் பிரமாண்டம் இருப்பதாலும் மேற்கொண்டு நகர கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.
 
ஆகிலும் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு முன்னேற வீரர்களை தயார் படுத்தலானார். ஆனால் அவரது தளபதி கொயேநூஸ் அலெக்ஸாண்டருடன் வாக்குவாதம் செய்து அவரது எண்ணத்தை மாற்றினார். அந்த தளபதி அலெக்ஸாண்டரிடம் ''நமது படை வீரர்கள் தங்களது பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிறதென்றும், அவர்களுக்கு வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும். அனைவரையும் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமென்றும்'' விவாதித்தார். ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார். மீண்டும் [[சிந்து நதி]] கடந்து வழியில் மல்லி மலைவாழ் (தற்போதைய முல்தான்) மக்களையும் மேலும் சில இந்திய பழங்குடியினரையும் எதிர்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_அலெக்சாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது