"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
New page: '''அதிவீரராம பாண்டியர்''' 14 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் எனக் கருதப்படும...
(ஆரம்பம்)
 
(New page: '''அதிவீரராம பாண்டியர்''' 14 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் எனக் கருதப்படும...)
'''அதிவீரராம பாண்டியர்''' 14 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் எனக் கருதப்படும் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவர் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசிக் காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[இலிங்க புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலும் இவர் இயற்றியதே.
 
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். தென்காசியில் இருக்கும் சிவாலயம் ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
{{பாண்டியர் வரலாறு}}
[[பகுப்பு:பாண்டியர்]]
 
'''சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்''' கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[நெல்வேலி மாறன்|நெல்வேலி மாறனின்]] முதலாம் மகனாவான்.'''அழகன் சீவலவேள்''' என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக [[தென்காசி|தென்காசியில்]] [[குலசேகரமுடையார் ஆலயம்]] அமைத்து [[விண்ணகரம்]] ஒன்றினையும் அமைத்தான். [[சிவன்|சிவனிடன்]] பக்தியுடைய இம்மன்னன் சிறந்த [[புலவன்|புலவனும்]] ஆவான். [[தமிழ்|தமிழில்]] மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் [[வடமொழி|வடமொழியிலும்]] தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான '[[நைஷதம்]]' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு [[இராமகிருஷ்ணர்]] என்ற வடமொழி [[அந்தணர்]] உதவிகள் பல செய்தார். [[கூர்ம புராணம்]], [[வாயுசங்கிதை]], [[காசிகாண்டம்]], [[இலிங்க புராணம்]], [[நறுந்தொகை]] ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/198000" இருந்து மீள்விக்கப்பட்டது