இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
இனியவை நாற்பது செய்திகள் என்னும் இந்தப் பகுதியில் [[இனியவை நாற்பது]] என்னும் நூலில் உள்ள நாற்பது பாடல்கள் மற்றும் அதன் கடவுள் வாழ்த்து ஆகியவற்றில் உள்ள செய்திகள் அனைத்தும் தொகுத்துத் தரப்படுகின்றன. வாழ்வில் இனிமை தரும் செய்திகள் இவை. [[தேவாரம்]], [[திருமுறை]] பாடல்கள் தோன்றிய காலத்தில் இல்லாத [[விநாயகர்|ஆனைமுகனைப்]] போற்றும் பாடல்கள் இதன் கடவுள் வாழ்த்துப்பாடலில் உள்ளதால் கடவுள் வாழ்த்துச் செய்தி மட்டும் பிற்காலத்தது எனத் தெரியவருகிறது. ஒவ்வொரு செய்தியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள எண்ணானது நூலிலுள்ள பாடலின் வரிசையெண்ணைக் குறிக்கும்.
==அ==
*அச்சு – அஞ்சாதே என்று உறவினர் கூறக் கேட்டல் - கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் 37
*அஞ்சாமை – அரசன் பகைவர் திறம் கண்டு அஞ்சாமல் இருத்தல் - வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து, மனன் அஞ்சான் ஆகல் 14
*அடைக்கலம் – அடைகலப் பொருளைத் தனதாக்கிக்கொள்ளாமை - அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் வௌவாத நன்றி 30
*அடைக்கலம் – அடைந்தார் துயர் கூரா ஆற்றல் 31
*அந்தணர் – அந்தணர்க்கு பசு, பொன் தருதல் - ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு 23
*அந்தணர் – வேதம் ஓதுதல் - அந்தணர் ஓத்துடைமை 7
*அரசர் – பகைவர் படையைத் தடுத்தல் - வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் தானை தடுத்தல் 33
*அரசன் – கெடுங்கோல் வீரம் காட்டாமை - கோல் கோடி மாராயம் செய்யாமை 5
*அரசன் - செங்கோலன் ஆகுதல் எய்தும் திறத்தால் 5
*அரசன் – தனிப்பட்ட பற்று இல்லாமல் பல உயிரினங்களையும் சமமாகப் பார்த்தல் - பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல் வெற்ற வேல் வேந்தர்க்கு இனிது. 35
*அரசன் – மக்களீடம் பற்று இல்லாத வேந்தன் கீழ் வாழாமை - பற்று அமையா வேந்தன் கீழ் வாழாமை 32
*அழுக்காறு - அவ்வித்து அழுக்காறு உரையாமை 36
*அறம் - அறம் புரிந்து, அல்லவை நீக்கல் 21
*அறம் - ஆற்றும் துணையால் அறம் செய்கை 6
*அன்புடையார் - பங்கம் (கேடு) இல் செய்கையர் ஆகி, பரிந்து (இரக்கம் கொண்டு), யார்க்கும் அன்புடையர் ஆதல் 9
 
==ஆ==
ஆ – பால் தரும் கன்றும் பசுவும் உடையவன் மனையில் விருந்துண்ணல் - எத் துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும் கற்றா உடையான் விருந்து. 38
"https://ta.wikipedia.org/wiki/இனியவை_நாற்பது_செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது