"திருப்பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ [[ஆழ்வார்]]களில் ஒருவரான [[ஆண்டாள்]] பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் [[பாவை நோன்பு]] நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
 
இதன் இரண்டாம் பாடல் நோன்பு நோற்கும் விதத்தையும், மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் [[துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
 
==முதற்பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/201339" இருந்து மீள்விக்கப்பட்டது