கனடாவின் உச்ச நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Supreme Court of Canada}} தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

08:05, 13 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

கனடாவின் உச்சநீதி மன்றம் (Supreme Court of Canada, பிரெஞ்சு மொழி: Cour suprême du Canada) கனடாவின் மிகவும் உயரிய நீதிமன்றமாகும். கனடிய நீதி முறைமையில் மேல்முறையீடுகளுக்கான இறுதி நீதிமன்றமாகும்.[1] இந்த நீதிமன்றம் ஆண்டொன்றுக்கு மாகாண, ஆட்பகுதி மற்றும் கூட்டரசின் மேல் முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தீர்வு கிடைக்காத 40 முதல் 75 வாதிகளுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குகின்றது. இதன் முடிவுகள் கனடியச் சட்டங்களின் இறுதி வெளிப்பாடாகவும் பயன்பாடாகவும் அனைத்து கீழ் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளன; இந்த தீர்ப்புகளுக்கு மேலோங்கும் வண்ணமோ செயலற்றதாக்கும் வண்ணமோ நாடாளுமன்றத்திலும் மாகாண சட்டப்பேரவைகளிலும் கனடிய உரிமை சுதந்திரப் பட்டயம் பிரிவு 33படி சட்டங்கள் இயற்றப்படலாம் (மீச்செல் பிரிவு).

கனடாவின் உச்சநீதி மன்றம்
கூர் சுப்ரெம் டு கனடா (கனடிய பிரான்சியம்)
கனடிய உச்சநீதி மன்றத்தின் முத்திரைப் பட்டை
நிறுவப்பட்டது8 ஏப்ரல் 1875
அமைவிடம்ஒட்டாவா
புவியியல் ஆள்கூற்று45°42'46.021"N 74°0'21.388"W
நியமன முறைகனடாவில் நீதியரசர்களின் நியமனம்
அதிகாரமளிப்புஅரசியலமைப்புச் சட்டம், 1867 மற்றும் உச்சநீதி மன்றச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்75 அகவையில் கட்டாய ஓய்வு
இருக்கைகள் எண்ணிக்கை9
வலைத்தளம்www.scc-csc.ca
கனடாவின் தலைமை நீதிபதி
தற்போதையபெவர்லி மக்லாக்லின்
பதவியில்7 சனவரி 2000

மேற்சான்றுகள்

  1. "Role of the Court". Supreme Court of Canada. 23 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.