குத்துவிளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{dablink|இதே பெயரில் வெளிவந்த ஈழத்துத் திரைப்படம் பற்றிய தகவலுக்கு [[குத்துவிளக்கு (திரைப்படம்)]] கட்டுரையைப் பார்க்க.}}
[[Fileபடிமம்:Lighting-a-lamp.jpg|right|thumb|200px|குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது]]
'''குத்துவிளக்கு''' இந்தியாவின் மரபு சார்ந்த [[விளக்கு|விளக்குகளுள்]]களுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக [[இந்து சமயம்|இந்துக்களால்]] கருதப்படும் இந்தவகை விளக்கு, சமய சார்பான சடங்குகளுக்கும், மற்றும் பொது [[விழா|விழாக்களிலும்]]க்களிலும் இடம் பெறுகின்றன.
[[படிமம்:Kuththu Vilakku.jpg|thumb|100px|right|ஒரு பித்தளைக் குத்துவிளக்கு]]
'''குத்துவிளக்கு''' இந்தியாவின் மரபு சார்ந்த [[விளக்கு|விளக்குகளுள்]] தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக [[இந்து சமயம்|இந்துக்களால்]] கருதப்படும் இந்தவகை விளக்கு, சமய சார்பான சடங்குகளுக்கும், மற்றும் பொது [[விழா|விழாக்களிலும்]] இடம் பெறுகின்றன.
 
== குத்து விளக்கின் அமைப்பு ==
[[Fileபடிமம்:Mayilmuga kuthuvilakku.jpg|thumb|left|100px|மயில் முகங்கொண்ட குத்துவிளக்கு]]
[[Fileபடிமம்:Annapatchimuga kuthuvilakku.jpg|thumb|right|100px|அன்னப்பட்சி முகங்கொண்ட குத்துவிளக்கு]]
வட்ட வடிவமான அடியில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும் அலங்காரங்களைக் கொண்ட தண்டு குத்து விளக்கின் தலைப்பகுதியைத் தாங்கியுள்ளவாறு அமைந்ததே குத்து விளக்கின் அமைப்பாகும். தலைப் பகுதியும் வட்ட வடிவமானதே. இவ் வட்ட வடிவத்தின் மையப் பகுதியில் [[கலசம்]] போன்ற உச்சிப் பகுதி பொருத்தப்பட்டிருக்கும். இக் கலச வடிவம் வட்டத் தலைப் பகுதியுடன் பொருந்தும் இடத்தைச் சுற்றிய பகுதி குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவே இவ்விளக்கின் [[எண்ணெய்]] தாங்கியாகும். இதன் வட்ட வட்ட வடிவான விளிம்பிலிருந்து சமமான இடை வெளிகளில் அமைக்கப்பட்ட ஐந்து நீட்சியான அமைப்புக்கள் இருக்கும். இவையே விளக்கின் [[சுவாலை|சுவாலையை]]யை ஏற்றுவதற்கான [[திரி|திரிகளைக்]]களைக் கொண்டிருக்கும் இடமாகும். முன்னர் குறிப்பிடப் பட்ட கலசம் போன்ற உச்சியமைப்பில் சில சமயங்களில் பலவகையான அலங்கார வடிவங்களும், உருவங்களும் பொருத்தப்படுவதுண்டு. பொதுவாகப் பெரிய அளவிலான விளக்குகள், [[அன்னப் பட்சி]], [[மயில்]] போன்ற உருவங்களையும், சில விளக்குகளில், தெய்வ உருவங்களையும் இவ்விடத்தில் கொண்டிருப்பதைக் காணலாம்.
 
== குத்துவிளக்கின் தத்துவம் ==
குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.
 
== தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் ==
[[பித்தளை|பித்தளையே]]யே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். இவ்வுலோகம் வேண்டிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் உருக்கி வார்க்கப்பட்டுப் பின்னர் அதனை வெளியில் எடுத்துக் கண்ணுக்குத் தெரியக் கூடிய பகுதிகள் மினுக்கம் செய்யப் படுகின்றன. சுலபமாக உருக்கி வார்க்கக் கூடிய தன்மையும், [[தங்கம்|தங்கத்தை]] ஒத்த அதன் [[நிறம்|நிறமும்]] இவ்வுலோகம் விரும்பப் படுவதற்கான காரணங்களாகும். இக் காலத்தில் [[துருவேறா உருக்கு|துருவேறா உருக்கையும்]] குத்து விளக்குகள் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சிறிய விளக்குகளே இவ்வாறு செய்யப்படுகின்றன. இவ்வுலோகத்தைப் பயன்படுத்தும் போது, உருக்குத் தகடுகளையே பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய விளக்குகள் [[விலை]] குறைவானவையாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகா.
 
== எரி பொருள் ==
குத்து விளக்கில் தாவர நெய்களே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில்களில் முற்காலத்தில் பசு நெய்யையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[குத்து விளக்குக் கோலம்]]
*[[எண்ணெய் விளக்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குத்துவிளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது