லூர்து நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சி மரியாளின் காட்சிகள்
வரிசை 25:
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுமையிலிருந்தும் வருகைத் தரும் அறுபது இலட்சம் வருகையாளர்களின் மூலம், லூர்து நகர் பிரான்சு நாட்டின் சுற்றுலாத் தளங்களில் பாரீசிற்கு அடுத்து இரண்டாமிடத்திலும், அகில உலக கத்தோலிக்க புனித பயணத்தளங்களில் [[உரோம்|ரோமிற்கும்]], புனித பூமிக்கும் அடுத்ததாக மூன்றாமிடத்திலும் அமைந்துள்ளது.
 
== காட்சிகளும், புனிதப்பயணங்களும் ==
கிறித்தவர்களின் கூற்றுப்படி, கன்னி மரியாள் பெர்னதத்துக்கு மொத்தம் பதினெட்டு முறை காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறாது. பெர்னதெத்துக்கு மரியாள் காட்சி கொடுத்தப் பிறகு லூர்து நகர் குணமளிக்கும் புனித நகராகவும், புனிதப் பயண தலமாகவும் மாறியது. மரியாள் முதல் காட்சிக் கொடுத்ததன் 150 ஆம் ஆண்டு யூப்ளி கொண்டாட்டம் பதினொன்றாம் தேதி பிப்ரவரி மாதம் 2008 ஆம் ஆண்டு, 45,000 புனிதப்பயணிகள் குழும நடைப்பெற்றது.
 
1858 ஆம் ஆண்டு பிப்ரவர் மாதம் பதினோராம் தேதி மாலைப்பொழுதில் பெர்னதெத் தன் சகோதரியுடனும் இன்னொரு தோழியுடனும் சுள்ளி பொறுக்கச் சென்றபோது மசபிள் க்ரொத்தோ எனுமிடத்தில் அவள் முன் ஒரு அழகான பெண் தோன்றினாள். முதன் முறை தோன்றியபோது பெர்னதெத் அவள் பெயரைக் கேட்டபோது ஏதும் சொல்லாத அப்பெண் மீண்டும் grotto எனும் அக்குகைக்கு திரும்படி கூறினாள். அடுத்தடுத்த சந்திப்புகளில் அப்பெண் பெர்னதெத்திடம் தன்னை அமலோற்பவ அன்னை என்று வெளிப்படுத்தினாள்.அக்காட்சிகளின்போது பெர்னதெத் செபமாலை செபித்தாள். கத்தோலிக்கம் பற்றி அதிகமறியாத பெர்னதெத் பங்குத் தந்தை அருட்திரு பெர்மல் என்பவரிடம் தான் கண்ட காட்சி குறித்து தெரிவித்தாள். காட்சி கொடுத்த பெண் கூறிய இடத்தில் நிலத்தை தோண்டியபோது அங்கு சிறிய நீரூற்று உண்டாயிற்று. அந்நீருற்றின் நீரை பருகியதும் குணம் பெற்றதாக கூறப்பட்டது. தற்போது ஆயிரக்கணக்கான கேலன் நீர் அந்நீருற்றிலிருந்து வெளிவருகிறது. அதை புனிதப்பயணிகள் பயன்படுத்த நீர் வழங்கிகளும், குளிக்க சிறப்பு குளியல் அறைகளும் ஆலயப் பொறுப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இத்தலத்தில் நரம்புப் பிரச்சனைகள், புற்று நோய் உட்பட பார்வையின்மை மற்றும் பக்கவாதம் வரையில் ஏராளமான குணமளிக்கும் அதிசயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ' கடந்த ஐம்பது ஆண்டுகளில் நான்காயிரம் குணம் பெற்ற சாட்சியங்கள் பதிவு செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது '.<ref>The Catholic Encyclopedia: An International Work of Reference on ..., Volume 9 edited by Charles George Herbermann</ref>
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது