"ஓம் மணி பத்மே ஹூம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
இந்த மந்திரத்துக்கு பல்வேறு பௌத்த பிரிவினர்களால் பல்வேறு பொருட்கள் கூறப்படுகின்றன.
 
'''மணி பத்மே''' என்றால் தாமரையில் இருக்கும் மணி என்று பொருள்(பத்மம் - தாமரை). இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும். ஆனால் [[டோனால்ட் லோபெஸ்]] என்பவர் மணிபத்மே என்பது மணிபத்மா என்பதின் பெண்பால் விளி எனக்கருதுகின்றார்(வடமொழியில் பெண்பால் பெயர்களை விளிக்கும் போது கடையெழுத்து ஏகாரம் பெறும்). எனவே இது மணிபத்மா என்ற போதிசத்துவரை குறித்தது என இவர் கருதுகின்றார். மணிபத்ம(கையில் ரத்தினமும் தாமரையும் ஏந்தியவர்) என்பது அவலோகிதெஷ்வரரின் இன்னொரு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் '''ஓம்''' என்பது அனைத்து மந்திரங்களிலும் முன்னொட்டாக வருவது மிகவும் புனிதமாக கருதப்படுவது. ஹூம் என்பது ஒரு பீஜாக்‌ஷரம் ஆகும். குறிப்பித்தக்க பௌத்த மந்திரங்களில் இது பின்னொட்டாக வருகிறது.
 
எனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது என பல மகாயான சூத்திரங்கள் கூறுகின்றன.
 
===வேற்றுமை===
இந்த மந்திரத்தில் இறுதியில் ஹ்ரீ:(ह्री:) என்ற பீஜாக்‌ஷரம் எப்போதாவது இணைக்கப்படுவதுண்டு. ஹ்ரீ: என்பது அமிதாப புத்தரின் பீஜாக்‌ஷரம் ஆகும். அவலோகிதேஷ்வரர் அமிதாபரின் அம்சமாக கருதப்படுவதால் இதை மணி மந்திரத்தில் இறுதியில் சேர்க்கப்படுவதுண்டு.
 
== நூல்கள் ==
3,721

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/210715" இருந்து மீள்விக்கப்பட்டது