மார்க்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு [[போராட்டம்|போராட்டங்களுக்கும்]] புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக மார்க்சியவாதிகளால் சொல்லப்படுகிறது.
 
மார்க்சிய முறைமை துவக்கத்தில் [[மார்க்சியப் பொருள்முதல் வாதம்]] என்ற [[பொருளாதாரம்]] மற்றும் சமூக,அரசியல் ஆய்வைப் பயன்படுத்தி அமைப்புசார் பொருளியல் மாற்றத்தில் [[முதலாளித்துவம்|முதலாளித்துவத்தின்]] வளர்ச்சி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பங்கினை ஆய்வு செய்யவும் கருத்துரைக்கவும் பயன்படுத்தியது. மார்க்சிய நோக்கில் மிகக்கூடுதலான உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரமயத்திற்கும் சமூகமாக உற்பத்தியில் ஈடுபடும் பாட்டாளி வர்கத்திற்கும் இடையே எழும் முரண்களால் முதலாளித்துவத்தினுள் வர்க்கப் போராட்டம் எழுகின்றது. தனியார் உடமையும் கூடுதல் பொருளை (இலாபத்தினை) சிறுபான்மையான தனியார் உரிமையாளர்களே எடுத்துக் கொள்வதும் இந்த வர்க்கப் போராட்டத்தின் கூடுதல் காரணிகளாகும். இந்த சிறுபான்மையான முதலாளிகள் ''பூர்சுவாசிபூர்சுவா'' (bourgeoisie) எனப்படுகின்றனர். தொழிலாளர்களை அன்னியப்படுத்துவதால் இந்த முரண்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு தெளிவாகும்போது இந்த இரு எதிரெதிர் வகுப்புக்களிடையே சமூக கிளர்ச்சி எழுகின்றது. இதுவே தீவிரமடைந்து சமூகப் புரட்சியாக மாறுகின்றது. இந்தப் புரட்சியின் நீண்டகால வெளிப்பாடாக [[சமூகவுடைமை]] உருவாகின்றது; உற்பத்திக்கான வளங்கள் சமூக உடைமையாக்கலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்களிப்பிற்கேற்ற பகிர்தலும் நேரடிப் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டுமே உற்பத்தி செய்வதும் இந்த சமூகப் பொருளியல் அமைப்பிற்கான அடிப்படைகளாகும். உற்பத்தி இழுப்புகளும் தொழினுட்பமும் முன்னேறி வந்தமையால் மார்க்சு சமூகவுடமை இறுதியில் [[பொதுவுடைமை]]க்கு வழிவகுக்கும் எனக் கருதினார்; அனைத்தும் மக்களின் உடமையான "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும் வர்க்கங்கள் இல்லாத, நாட்டு அடையாளமில்லாத, மாந்த சமூகமாக முன்னேறும் என கருத்துரைத்தார்.
 
== மார்க்சிய நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்க்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது