கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 38:
1933−ல் [[டிசம்பர் 2]]இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.
 
நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் [[1934]]−ல் [[திருநாளைப் போவார் நாயனார்|நந்தனார்]] நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.
 
==திரைப்படத் துறையில்==
[[பக்த நந்தனார் (திரைப்படம், 1935 திரைப்படம்)|பக்த நந்தனார்]] என்னும் படத்தில் [[நந்தனார்]] வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். [[1935]]இல் இப்படம் வெளிவந்தது.
 
அடுத்ததாக [[மணிமேகலை]]யில் நடித்தார். [[1938]]−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு [[1940]]−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.