அடுக்கு விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==கட்டிடங்களில் அடுக்கு விளைவு==
கட்டிடங்கள் முற்றாகவே இறுக்கமாக மூடப்பட்டிருப்பதில்லை. தரைத் தளத்தில் கதவுகள் இருக்கும். இவற்றினூடாகவும் காற்று உட்செல்ல முடியும். கட்டிடங்களின் கீழ்ப்பகுதிகளில் வளி சூடாகும்போது அடர்த்தி குறைவதால் அது மேல்நோக்கிச் செல்கிறது. இருக்கக்கூடிய [[படிக்கட்டு]] வெளிகள் முதலியவற்றினூடாக மேல் தளங்களுக்குச் செல்லும் இச் சூடான வளி சாளரங்கள் மற்றும் இடைவெளிகளூடாக வெளியேறும். கீழ் மட்டத்திலிருந்து வளி மேலெழுந்து செல்வதால் கீழ் மட்டங்களில் [[அமுக்கம்]] குறையும். இதனால் குளிர்ந்த வெளிக் காற்று கீழ் மட்டத்திலுள்ள [[கதவு]]கள் போன்ற வெளிகளினூடாகக் கட்டிடங்களுக்குள் வரும். குளிரூட்டப்படும் கட்டிடங்களில் இது மறுதலையாக நடைபெறும். எனினும் இதில் வெப்பநிலை வேறுபாடுகள் குறைவாக இருப்பதால் அடுக்கு விளைவு முன்னதைப் போல் வலுவாக இருபதில்லை.
 
உயரமான நவீன கட்டிடங்களில், புறக்கூடு கூடிய அளவு இறுக்கமாக மூடப்பட்டிருப்பதால் அடுக்கு விளைவு குறிப்பிடத்தக்க அமுக்க வேறுபாட்டை ஏற்படுத்தலாம். இதனை ஈடு செய்வதற்கு [[வடிவமைப்பு|வடிவமைப்பில்]] உரிய கவனம் செலுத்தவேண்டி இருக்கும். [[பொறிமுறைக் காற்றோட்டம்|பொறிமுறைக் காற்றோட்ட]] வழிமுறைகளையும் கைக்கொள்ளவேண்டி இருக்கலாம். படிக்கட்டுகள், குளாய்வழிகள், [[உயர்த்திவழி]]கள் போன்றவை அடுக்கு விளைவை ஊக்குவிக்கின்றன. [[பிரிசுவர்]]கள், தளங்கள், [[தீத்தடுப்பு]] ஒழுங்குகள் போன்றவை இவ்விளைவைக் குறைக்க உதவலாம். தீத்தடுப்பைப் பொறுத்தவரை, அடுக்கு விளைவைக் குறைப்பது முக்கியமானது ஏனெனில் அடுக்கு விளைவினால் தீ கீழ்த் தளங்களிலிருந்து மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
 
[[பகுப்பு:கட்டிடப் பொறியியல்]]
[[பகுப்பு:வெப்பஇயக்கவியல்வெப்ப இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அடுக்கு_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது