"இராசேந்திர சோழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (clean up)
| year of death= கி.பி. 1044}}
 
'''இராசேந்திர சோழன்''' [[சோழர்|சோழர்களின்]] புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் [[தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சை பெரிய கோவிலை]] கட்டியவனுமான [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். [[விஜயாலய சோழன்]] காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
 
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]] என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே [[சிவன்|சிவபெருமானுக்காக]] இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் [[சோழர் கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]] ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தயாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள [[திருக்காளத்தி_காளத்தியப்பர்_கோயில்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்|காலஹஸ்தி கோயில்]] இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.
 
== சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன் ==
 
=== கங்கையை நோக்கிய படையெடுப்பு ===
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் [[ஈழம்]] [[பாண்டியர்|பாண்டிய]] [[சேரர்|சேர]] தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த [[சோழர்|சோழ]] நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனைக் கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019இல் இராஜேந்திரனின் படை [[கங்கை|கங்கையை]] நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். [[சோழர் படை|சோழர் படைகள்]] வங்கதேசத்தின் [[பாலப் பேரரசு| பால வமிசத்துப்]] புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.
 
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.
=== இலாமுரி தேசம் ===
 
[[இலமூரி சுல்தானகம்|இலாமுரி தேசம்]] என்பது, [[சுமத்திரா]]வின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள [[ஸ்ரீவிஜயம்| ஸ்ரீவிஜய]] இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.
 
== இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் ==
 
== இராஜேந்திர சோழன் சமாதி ==
ராஜேந்திர சோழனின் சமாதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தெலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில்<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6279315.ece| ராசேந்திர சோழன் கல்லறையை சீரமைத்து விழா: ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவினர் தகவல்]</ref> இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பழங்கால கோவிலில் அமைந்துள்ளது.
 
 
=== விருதுகள் ===
 
==கற்றளி==
மாமன்னன் [[முதலாம் இராஜராஜ சோழன்|இராஜராஜசோழனின்]] தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவவம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே [[பஞ்சவன்மாதேவீச்சரம்|பஞ்சவன்மாதேவீச்சரமாகும்]]. இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. <ref name="kb"> குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2150928" இருந்து மீள்விக்கப்பட்டது