போதிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''போதிகை''' என்பது, கட்டிடங்களில் தூண்களின் மேற்பகுதியாக அமைந்து மேலுள்ள உத்தரத்தைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும். போதிகைகள் தூணின் வெட்டுமுக அளவைவிடக் கூடிய தாங்கு பரப்புக் கொண்டவை இதனால், கட்டிடத்தின் மேற்பகுதியின் சுமையைக் கூடிய பரப்பில் ஏற்றுத் தூணுக்குக் கடத்தும் பகுதியாக அவை தொழிற்படுகின்றன. அத்துடன், கட்டிடங்களுக்கு எழிலூட்டும் ஒரு கூறாகவும் அது உள்ளது.<ref>இராகவன், அ., தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை-1, அமிழ்தம் பதிப்பகம், 2007. பக் 229, 230</ref>
போதிகைகள் வழக்கிலுள்ள இடங்களில் பல்வேறு காலகட்டங்களினூடாகக் கட்டிடக்கலை வளர்ச்சியடையும்போது போதிகைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அவற்றின் வடிவமும் வேலைப்பாடுகளும் அவற்றுக்கு மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன. இதனால், கட்டிடங்களின் காலத்தைக் கண்டறிவதற்குப் போதிகைகளும் உதவுகின்றன. பல்வேறு வடிவங்களைக் கொண்ட போதிகைகள் உலகின் பல பகுதிகளிலும் மிகப் பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போதிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது