முகப்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''முகப்பியம்''' (Facadism) என்பது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
கட்டிட முகப்புக்களைப் பாதுகாப்பதற்குப் பல வரலாற்று, [[அழகியல்]] காரணங்கள் உள்ளன. கட்டிடங்களின் உட்புறங்கள் தீப்பிடித்தல் போன்ற அழிவுகளுக்கு உள்ளாகிப் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்படும்போது, முகப்பைப் பாதுகாப்பதற்கு முகப்பிய நடைமுறையைச் சிலர் பயன்படுத்துகின்றனர். வணிக நோக்கத்துக்காகக் கட்டிடங்களைக் கட்டி விற்பவர்கள், வரலாற்று அல்லது அழகியல் முக்கியத்துவம் உள்ள கட்டிடங்களுக்குப் பதிலாகப் புதிய கட்டிடங்களைக் கட்ட முயலும்போது, மரபுரிமைப் பாதுகாப்பாளர்களுடன் இணக்கத்துக்கு வருவதற்காக இந்த நடைமுறையைக் கைக்கொள்வது உண்டு.
 
கட்டிடங்களைப் புதுப்பித்தல், தகவமை மீள்பயன்பாடு, மீள்கட்டுமானம், முகப்பியம் போன்றவற்றுக்கு இடையே தெளிவற்ற எல்லைகள் இருப்பதுண்டு. சிலவேளைகளில் கட்டிடங்களைப் புதுப்பிக்கும் போர்வையில் வெளிச்சுவர்கள் தவிர்ந்த எல்லாப் பகுதிகளையும் அகற்றிவிட்டு மீளக்கட்டுவர். இது முகப்பியத்துக்குச் சமம். வெளிச்சுவர், கூரை, தளங்கள் ஆகியவற்றை அப்படியே வைத்துக்கொண்டு செய்யும் புதுப்பித்தல்களும், திருத்த வேலைகளும் பழைய கட்டிடத்துடனான இணைப்பைப் பெருமளவுக்குப் பேணும் வகையில் அமைகின்றன. இதற்கு முரணாக, முகப்பியத்தில் சாலை முகப்புகளாக அமையக்கூடிய ஒன்றோ இரண்டோ முகப்புக்களை மட்டும் அழகியல் மற்றும் அலங்காரக் காரணங்களுக்காக விட்டுவைப்பது முகப்பியத்தின் வழமையான நடைமுறை.<ref name="Richards2012">{{cite book|author=Jonathan Richards| title=Facadism| url=https://books.google.com/books?id=hLf5erNaEEsC&pg=PR7-IA17| date=12 November 2012| publisher=Routledge| isbn=978-1-134-88952-5| pages=7–}}</ref>
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/முகப்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது