அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 463:
 
=== ஆண்டின் தமிழ்ப் பெயர் ஆட்சி ===
மேலே 60 ஆண்டுகளின் பெயருக்கு இணையான தமிழ்ச்சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பாடப்பட்ட பாடல் ஒன்று [[விவேக சிந்தாமணி]] நூலில் உள்ளது. <ref>விவேக சிந்தாமணி, மூலமும் உரையும், ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், 159, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, சென்னை 1,</ref>
 
:ஒருநான்கும் ஈரரையும் என்றே கேளாய் உண்மையாய் ஐயரையும் அரையுங் கேட்டேன்
:இருநான்கு மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
:பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே பின்னையோர் மொழிபுகல வேண்டாம் இன்றே
:சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே சகிக்கமுடி யாதினியென் சகியே மானே. (18)
 
*ஒருநான்கும் ஈரரையும் – நான்கும் இரண்டும் ஆறு – ஆறாவது ஓரை கன்னி – கன்னியே நான் அரையும் சொல்லை நீ கேளாய்
*உண்மையாய் ஐயரையும் சொல்வனவற்றையும் கேட்டேன்.
*இருநான்கு மூன்று – 2 * 4 * 3 = 24 – 24 ஆவது தமிழாண்டு விக்ருதி – இதன் தமிழ்ப்பெயர் வளமாற்றம். - நீ எனக்கு வளமான மாற்றம் (விடை) தரவில்லை.
*என் மொழியைக் கேட்டபடி உன்னை எனக்குக் கொடுத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பெருநான்கு பேறும் பெறுவாய். உன்னிடம் அறுந்து கிடக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கும் பெறுவாய்.
*பெண்ணே!
*பின்னை மேலும் ஒரு மொழி புகலவேண்டாம்.
*இன்றே உன்னைத் தருக.
*சரியாக நான்கு – நான்காவது தமிழாண்டு பிரமோதூத – இதன் தமிழ்ப்பெயர் பேருவகை
*பத்து – பத்தாவது தமிழாண்டு தாது – இதன் தமிழ்ப்பெயர் மாழை – மாழை = தங்கம்
*பதினைந்து – பதினைந்தாவது தமிழாண்டு விசு – இதன் தமிழ்ப்பெயர் விளைபயன்.
*தங்கமே பேருவகையோடு விளையும் பயனைக் காண்.
*சகியே (காதல் கனியே) என் ஆசையை இனிமேல் சகித்துக்கொள்ள முடியாது.
*காதலன் காதலியிடம் இவ்வாறு உரையாடுகிறான்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது