விண் உடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (GR) File renamed: File:Apollo 1 - 03.jpgFile:Apollo 1 - Chaffee in Apollo Block I space suit.jpg File renaming criterion #2: To change from a meaningless or ambiguous name to a name that describe...
(edited with ProveIt)
வரிசை 2:
 
[[Image:Apollo Moonwalk2.jpg|thumb|அப்பலோ-11 பயணத்தின் போது [[எட்வின் ஆல்ட்ரின்]] விண் உடையுடன் சந்திரத் தரையில்.]]
'''விண் உடை''' அல்லது '''விண்வெளி உடை''' (space suit) என்பது வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான [[விண்வெளி]]யில் மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு [[ஆடை]]யாகும். மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும் விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் வீரரின் உடலுக்குத் தேவைப்படும் [[காற்று]], [[நீர்]], வெப்பம் ஆகியன கிடைககும் விதத்திலும், [[வேர்வை]], [[சிறுநீர்]], [[கரியமிலவாயு]] ஆகியவற்றை அகற்றும் விதத்தில் விண் உடை வடிவமைக்கப்படுகிறது. வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டதாக இருக்கும். இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும் [[ஆக்சிசன்]] தொட்டி இருக்கும்.<ref>http://www.astronautix.com/fam/spasuits.htmM=</ref> வின் உடையானது ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் அவரது உடல் அமைப்புக்கு ஏற்ப்ப பிரத்யேகமாக தயாரிக்கப்படும். பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் மூன்று உடைகள் தயாரிக்கப்படும் இதில் பயிற்சிக்கு ஒன்று, விண்வெளி பயணத்தின்போது ஒன்று, மாற்று உடை ஒன்று ஆகும். வின் உடைகளின் எடை புவியைப் பொறுத்தவரை மிகக் கூடுதலாக இருக்கும், ஆனால் இவை ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பயன்படுதும்போது எடை தெரியாது. விண்வெளி உடை ஒன்றின் சராசரி விலை மூன்று கோடிவரை ஆகும்.
== அடைந்துவந்த மாற்றங்ங்கள் ==
விண்வெளி உடைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும், அவை பயன்படுத்தத் துவங்கிய ஆண்டுகளில் இருந்து மிகப் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. துவக்கக்கால கால விண் உடைகள் விமானிகள் உடையின் இறுக்கமான வடிவைக் கொண்டிருந்தன. [[சோவியத் ஒன்றியம்|சோவியத் உருசியாவின்]] விண்வெளி வீரரான அலெக்ஸி லியநோவ், 1965 இல் வாஸ்கோட் 2 விண்கலத்தில் சென்று விண்வெளியில் முதலில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர். இவரின் முதல் விண் நடையின்போது, இவர் அணிந்திருந்த விண் உடையின் உள்ளே ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால் விண் உடை ஊதிப் பெருக்க ஆரம்பித்து சிக்கலை உண்டாக்கியது, இதன் காரணமாக லியநோவ் நகர இயலாமல் திணறிப்போனார் காரணம் விண்வெளியில் ஏற்பட்ட கடுமையான அழுத்தமே இதற்க்கு காரணமாக ஆனது. இந்தப் படிப்பினையின் காரணமாக அப்பல்லோ விண்கலத் திட்டங்களுக்கு உருவாக்கப்பட்ட ஏ7எல் விண் உடைகள் அழுத்தச் சமநிலையைப் பாதுகாக்கும்வகையில் அந்த உடைகள் விரிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டன, மேலும் காற்றை மறுசுழற்சி செய்யும் அமைப்பும், உடைக்குள் 100 மில்லி குளிர்ந்த நீரும் சுழன்றுகொண்டே இருக்கும் அமைப்புகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/education/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-20-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9563242.ece | title=விண்வெளி உடைகள் ஏன் மாறுவதில்லை? | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 பெப்ரவரி 28 | accessdate=28 பெப்ரவரி 2017 | author=ஆதி}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விண்_உடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது