ஐனு இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Ethnic group| |group=அயினு |image=300px<br>அயினு மக்கள், 1904 படம். |poptime= '''50,000'...
 
No edit summary
வரிசை 15:
 
 
'''அயினு இனக்குழு''' ஜப்பானின், [[ஹொக்கைடோ]], [[குரில் தீவுகள்]], [[ரஷ்யா]]வின் ஒரு பகுதியான [[சக்காலின் தீவு]] ஆகியவற்றில் வாழும் ஒரு இனக்குழுவாகும். வடக்கு [[ஹொன்ஷு]]வின் சில பகுதிகளிலும், [[கம்சத்கா குடாநாடு|கம்சத்கா குடாநாட்டின்]] தெற்குப்பக்க மூன்றிலொரு பகுதியிலும், முற்காலத்தில் இவர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் எனச் சிலர் எண்ணுகிறார்கள். இவர்களைக் குறிக்கப் பரவலாகப் பயன்படும் இனப்பெயர், [[அயினு மொழி]]யின் ஹொக்கைடோ கிளைமொழிகளின் ''மனிதன்'' எனப் பொருள்படும் ''ஐனு'' (aynu) என்பதில் இருந்து பெறப்பட்டது. எமிஷி, எசோ, யெசோ போன்ற இவ்வினத்தவரைக் குறிக்கும் பெயர்கள் [[ஜப்பானிய மொழி]]ப் பெயர்களாகும். இவையும், ''மனிதன்'' என்னும் பொருள் குறிக்கும் ''என்சிவ் (enciw) அல்லது எஞ்ஜு (enju)'' எனும் தற்கால சக்காலின் அயினு மொழிச் சொல்லின் பழங்கால வடிவம் என நம்பப்படுகின்றது. ''தோழர்'' என்னும் பொருள்படும் '''உத்தாரி''' என்னும் சொல்லையே இவ்வினத்தவரில் சிலர் விரும்புகிறார்கள். இவர்களின் தொகை சுமார் 150,000 இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இவர்களில் பலர் தங்கள் அடையாளத்தை மறைப்பதாலும், சிலருக்கு அவர்கள் அடையாளம் தெரியாமலே இருப்பதாலும், இனவாதத்திலிருந்து தப்புவதற்காகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமிருந்து அவர்கள் அடையாளத்தை மறைப்பதாலும், அவர்களது எண்ணிக்கையைச் சரியாகக் கூறமுடியாது.
"https://ta.wikipedia.org/wiki/ஐனு_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது