எம். எஸ். தோனி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
 
== கதைச்சுருக்கம்  ==
தோனியின் தந்தை பான் சிங் (அனுபம் கெர்) பம்ப் ஆபரேட்டர் வேலையில், சிறிய அடுக்குமாடி குடியிருப்பில், அன்பான குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் மகன் தோனி நன்றாக படிக்க வேண்டும், தன்னைப் போல பம்ப் ஆபரேட்டர் வேலை பார்க்க கூடாது என விரும்புகிறார். தோனிக்கு விளையாட்டில் மிக விருப்பம். பள்ளியில் கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பிங்கில் நன்கு ஆடுவதைக் கண்ட, பார்த்த பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி தோனியை துடுப்பாட்டத்தில் விக்கெட் கீப்பிங் செய்யச் சொல்கிறார். அங்கிருந்து தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையும், படத்தின் கதையும் துவங்குகிறது.
 
துடுப்பாட்டம் ஆட வந்த பிறகு, கூச் பீகார் டிராபி, துலீப் டிராஃபி என அடுத்தடுத்து பெரிய பெரிய போட்டிகளில் ஆடும் அளவுக்கு விரைவில் வளர்கிறார் தோனி. தோனி ஆட வந்தால் எதிரணி மிரள்வதும், பந்துகள் பறந்து தொலைவதும், ஆட்டத்தை பார்க்க பள்ளி மாணவர்கள் கூடுவதுமாக திரைக்கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில் இந்திய இரயில்வே அணிக்கு ஆட வாய்ப்பு கிடைக்கிறது இரயில்வேயில் வேலையும் கிடைக்கிறது. அப்பாவின் விருப்பத்துக்காக வேலைக்குச் செல்கிறார் தோனி. ஆனால் வேலை அவருக்கு பிடிக்காமல் போக, வேலையை விட்டுவிடுகிறார். அதன் பின்னர் தோனி எப்படி இந்திய அணிக்குள் நுழைந்தார், தோனியின் முதல் காதல் என்ன ஆனது, சாக்ஷியை கரம் பிடித்தது எப்படி? அணித்தலைவராக தோனி என்னவெல்லாம் செய்தார் என்பது படத்தின் பிற்பகுதி கதை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._எஸ்._தோனி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது