கிறீக் இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
1783 ஆம் ஆண்டில், போர் முடிவடைந்த பின்னர், பிரித்தானியர் கிறீக் நிலங்களை புதிய ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்ததை அறிந்தனர். ஜார்ஜியா மாநிலம் கிறீக் நிலப் பகுதிகளுக்குள் விரிவடையத் தொடங்கியது. கிறீக் அரசியல் தலைவனான [[அலெக்சாண்டர் மக்கில்லிவ்ரே]] (Alexander McGillivray) இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பரந்த தொல்குடியினரின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்தார். அத்துமீறும் ஜார்ஜியர்களுடன் போரிட புளோரிடாவில் இருந்த எசுப்பானியரிடம் இருந்து ஆயுதங்களும் அவருக்குக் கிடைத்தன. தனித்தனியாக அமெரிக்காவுக்குத் தங்கள் நிலங்களை விற்ற ஊர்த் தலைவர்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததுடன், கிறீக் அதிகாரத்தை மையப்படுத்தவும், கிறீக் [[தேசிய உணர்வு|தேசிய உணர்வை]] உருவாக்கவும், மக்கில்லிவ்ரே உழைத்தார். 1790 இல் செய்துகொள்ளப்பட்ட [[நியூ யார்க் ஒப்பந்தம்|நியூ யார்க் ஒப்பந்தத்தின்]] மூலம், எஞ்சிய பகுதியில் கிறீக் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற நிபந்தனையுடன், கிறீக் நிலங்களின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க மக்கில்லிவ்ரே உடன்பட்டார். ஆனால் மக்கில்லிவ்ரே 1793 ஆம் ஆண்டில் இறக்கவே, ஜார்ஜியர்கள், கிறீக் நிலப் பகுதிகளுக்குள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தனர்.
 
{{ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்}}
 
[[பகுப்பு:அமெரிக்க இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிறீக்_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது