மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Arcunan Thapas-1.jpg|thumb|350px|மாமல்லபுரம், அருச்சுனன் தவம் என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பத்தின் ஒரு பகுதி]]
[[மாமல்லபுரம்]] வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. [[தமிழ் நாடு|தமிழ் நாட்டைப்]] பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். [[சிற்பம்]] எனும் போது அதனுள் [[கட்டிடம்|கட்டிடங்கள்]], அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் '''மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்''' என்னும் இக்கட்டுரை [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்ப]] வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.
 
== துறைமுக நகரம் ==
பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான [[குடைவரை]]கள், [[ஒற்றைக்கல் தளி]]கள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன.<ref> காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.31.</ref> இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.
 
== கல்லில் செதுக்கப்பட்டவை ==
மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை [[கடவுள்|கடவுளரின்]] உருவங்கள், [[புராணக் கதை]] நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்பங்களாகவே]] காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய [[முப்பரிமாணம்|முப்பரிமாண]] அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.
 
== புகழ் பெற்ற மாமல்லபுரச் சிற்பங்கள் ==
 
* [[அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்|அருச்சுனன் தபசு]]
வரிசை 15:
* [[கோவர்த்தன மலை சிற்பம், மாமல்லபுரம்|கோவர்த்தன மலை சிற்பம்]]
 
== குறிப்புக்கள் ==
{{reflist}}
 
==படத்தொகுப்பு==
<gallery>
File:Relief Mamallapuram.jpg
File:Mahabalipuram6b.JPG
File:Mahabalipuram5b.JPG
File:Mahabalipuram4.JPG
File:Mahabalipuram3.JPG
File:Mahabalipuram2.JPG
File:Mahabalipuram1.JPG
File:Mahabalipuram Mahishasura 4.jpg
Image:Maamallapuram-1.jpg|ஐந்து இரதம்
Image:Maamallapuram-2.jpg|[[யானை]] சிற்பம்
File:Temple in Mamallapuram.JPG
File:Mamallapuram Five Rathas.jpg
File:Mamallapuram Dharmaraja Ratha.jpg
File:Elephant , (2444512448).jpg
File:Draupadi and Arjuna temples.jpg
File:Bhima temple.jpg
File:Bhima and Dharmaraja temples.jpg
</gallery>
 
[[பகுப்பு:மாமல்லபுரம்]]