நாளிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 264:
 
நாளிதழ்களின் அமைப்பை அதன் அளவு, பக்கம், விலை முதலியன கட்டமைக்கின்றன. பெரிய அளவில் இருப்பதுடன் இதழின் முதல் பக்கம் தலையாயதாக விளங்குகிறது.மேலும், இதழின் பெயர்,வெளிவரும் நாள்,அதன் விலை முதலியனவும் இதற்கு முக்கியமானதாக இருக்கின்றன.
 
===நாளிதழ்களின் உள்ளடக்கம்===
 
நாளிதழின் உள்ளடக்கமும், வார, மாத இதழ்களின் உள்ளடக்கமும் வேறானவையாக அமைகின்றன. மேலும் நாளிதழில் வலப்பக்கம் இடம்பெறும் செய்தி முக்கியமானதாகவும், பணம் அதிகம் தரும் செய்தியாகவும் அமைகின்றது. இன்னும் தெளிவாக அறிய வேண்டுமானால் நாளிதழின் உள்ளடக்கத்தைக் கீழ்க்காணுமாறு சொல்லலாம்.
 
(1) செய்தி முன்னுரை
 
(2) செய்தித் தலைப்பு
 
(3) தலைப்பின் வகைகள்
 
(4) தலைப்பெழுத்து வகைகள்
 
(5) தலைப்பின் பயன்கள்
 
(6) மற்றும் சில
 
 
 
===செய்தி முன்னுரை===
 
செய்தி இதழ்களில் இடம் பெறும் செய்திகள் அனைத்தையும் படித்துவிட இயலாது. காலக் குறைவு, ஆர்வமின்மை காரணமாகப் பல செய்திகள் படிக்க இயலாமல் போகும். அதனால் செய்தியைச் சுருக்கமாகத் தருவதே செய்தி முன்னுரை (Lead) ஆகும். இச்செய்தித் தொடக்கத்தைப் படித்த பின், தேவை ஏற்படின் அதன் செய்தித் தொடர்ச்சியினை மக்கள் படித்துக் கொள்வார்கள். தேவையில்லாத அல்லது தமக்கு ஆர்வமில்லாத செய்தியைத் தலைப்பை மட்டும் வாசித்து, விட்டுவிடுவார்கள்.இவ்வாறு தேர்வு செய்வதற்கு, தலைப்புக்குப் (Heading)பின் வரும் இந்த செய்தி முன்னுரை முக்கியமானதாக உள்ளது.
 
எடுத்துக்காட்டு :
 
பிளஸ் 2 தேர்வில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி
 
 
===செய்தித் தலைப்பு===
 
செய்திப் பகுதிக்குத் தலைப்பு முக்கியமானதாகும்.வேகமாக வாசிப்போருக்கு இந்தத் தலைப்புகள் மிக்க பயன் உடையனவாக அமையும்.ஆதலால், செய்தித் தலைப்புகள் துல்லியமாகவும், ஆர்வம் ஊட்டக் கூடியதாகவும், விறுவிறுப்பானதாகவும் இருத்தல் அவசியம்.
===தலைப்பின் வகைகள்===
 
தலைப்புகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,
(1) தலைமைத் தலைப்பு,
(2) செய்தித் தலைப்பு.
தலைமைத் தலைப்புகள் அரசியல் மாற்றம், போர், இயற்கை நிகழ்வு, பெரிய விபத்துகள், திடீர்த் திருப்பங்கள், அரசின் புதிய திட்டங்கள், உடன்படிக்கைகள், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முதலானவற்றை உள்ளடக்கியதாக அமையும். ஏனைய செய்திகளின் தலைப்புகள் செய்தித் தலைப்பு எனப்படும்.
 
===தலைப்பின் வகைகள்===
 
தலைப்பு வகைகள் பல்வேறு விதமாகப் பாகுபடுத்தப்படுகின்றன.அவை பின்வருமாறு:
 
 
நெற்றித் தலைப்பு (Topic Headline)
 
சிறப்புத் தலைப்பிற்கு மேல் சிறிய எழுத்துக்களாலும் அடிக் கோடிட்டும் அமைவதே நெற்றித் தலைப்பு எனப்படும்.
 
எடுத்துக்காட்டு :"ரேங்க் முறை ரத்து"
 
இடைநிலைத் தலைப்பு (Cross Line)
 
பக்க அமைப்பில் உள்ள பத்திகளில், பல பத்திகளை அடைத்துக் கொண்டு ஒரே தொடரில் இடைநிலையில் அமைவது இடைநிலைத் தலைப்பு எனப்படும்.
 
எடுத்துக்காட்டு :மாநிலத்திலேயே பிளஸ் 2 தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை தேர்ச்சி
 
 
முழுப்பக்க இடைநிலைத் தலைப்பு
 
இடப் பக்கத்திலிருந்து வலது பக்கம் வரை எட்டுப் பத்திகளையும் அடைத்தாற்போல் தலைப்பிடுவது முழுப்பக்க இடைநிலைத் தலைப்பு ஆகும்.எ.கா.:இலங்கைத் தமிழர்களுக்கு மேலும்10ஆயிரம் வீடுகள்.
 
கூம்புத் தலைப்பு (Pyramid Headline)
 
ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்கள் வருகின்ற அமைப்புடைய தலைப்பில், புதுக்கவிதை போலத் தொடரை வெட்டி, எகிப்தின் பிரமிடு போலக் கூம்பு வடிவத்தில் அமைப்பதாகும்.எ.கா.
 
திருவாரூர்
மாவட்டத்தில்
2நாட்களாக மழை
 
கவிழ் கூம்புத் தலைப்பு (Inverted Pyramid Headline)
 
ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்கள் வரும் தலைப்பில், பிரமிடு அமைப்பின் தலைகீழ் வடிவில் கவிழ் வடிவில் தலைப்பு அமைப்பது ஆகும்.சான்று:
 
நெசவுத் தொழிலாளர்களுக்கு
எல்இடி மின்விளக்குகள்
வழங்கல்.
 
 
சிறுதொடர் மேல்தலைப்பு (Kicker method)
 
தலைப்பிற்கு மேல் சிறிய தொடராகச் சிறு தலைப்பு அமைப்பது சிறுதொடர் மேல்தலைப்பாகும்.
உதாரணம்:அகில இந்திய ஹாக்கி போட்டி
 
நீண்ட தொடர் மேல்தலைப்பு (Reverse Kicker method)
 
சிறப்புத் தலைப்பினை விட மேலே இருக்கும் தலைப்பு நீளமானதாகவும், சிறிய அளவு எழுத்துகளாலும், அடிக்கோடிட்டும் அமைவது நீண்ட தொடர் மேல்தலைப்பாகும்.
 
எடுத்தக்காட்டு:கல்லீரல் நோய் ஒழிப்பு பிரச்சாரம்
 
கிளர்ச்சியூட்டும் தலைப்பு (Exciting Headline)
 
படிப்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில் எடுப்பான துடிப்பான சொற்களால் அமைவது இத்தலைப்பாகும்.
 
எடுத்துக்காட்டு:பஞ்சாப் 'த்ரில்'வெற்றி!
 
பரபரப்பூட்டும் தலைப்பு (Sensational Headline)
 
படிப்பவர்கள் பரபரப்புடன் செய்தியைப் புரட்டிப் படிக்கத் தூண்டும் வகையில் அமையும் தலைப்பு இது.
 
எடுத்துக்காட்டு:பல தார மணம் குறித்து விசாரிக்க மாட்டோம்.
 
தீவிரத் தலைப்பு (Radical Headline)
 
அதிரடியாகத் தரும் தலைப்பு ஆகும். பொதுவாக அரசியல் செய்திகள் இங்ஙனம் அமையும்.
 
எடுத்துக்காட்டு:இனி 500,1000 செல்லாது.
 
மிதவாதத் தலைப்பு (Conservative Headline)
 
தீவிரப் போக்கின்றி மிதவாத நிலையில் அமைப்பது மிதவாதத் தலைப்பாகும்.
 
எடுத்துக்காட்டு:ஏடிஎம்-மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்.
 
உந்து தலைப்பு (Topical Headline)
 
தலைப்பைப் படித்த அளவிலேயே முழுச் செய்தியையும் படிக்கத் தூண்டும் தலைப்பு உந்து தலைப்பு எனப்படும். இது சிறப்புத் தலைப்பிற்கு மேல் ஒரு தலைப்பாக அமைந்து, அடிக்கோடும் போடப்பட்டிருக்கும்.
 
எடுத்துக்காட்டு:பள்ளிப் பொதுத் தேர்வில் ரேங்க் முறை ஒழிப்பு
 
மேற்கோள் குறியுடைத் தலைப்பு (Quotation Headline)
 
தலைப்பின் இரு புறங்களிலும் மேற்கோள் குறியிடப்பட்ட தலைப்பு மேற்கோள் குறியுடைத் தலைப்பு எனப்படும்.
 
சான்று:'மூடப்பட்ட மதுக்கடைகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை'
 
வினாத் தலைப்பு (Question Headline)
 
வினா முறையில் அமையும் தலைப்பு இதுவாகும்.
 
எடுத்துக்காட்டு :குணசேகரா உனக்கு ஏதுசாவு?
 
நேர் வரிசை அடுக்குத் தலைப்பு (Flush left)
 
இவ்வகையில் தலைப்பு ஒரே சீரான நேர்வரிசை அடுக்குகளாக அமையும்.
 
எடுத்துக்காட்டு :தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழுக் கூட்டம்.
 
மாறுவரிசை அடுக்குத் தலைப்பு (Step line)
 
தலைப்பு அடுத்து வரும் வரிகள் சற்று உள் அடங்கி இருத்தல் இவ்வகையில் அடங்கும்.
 
எடுத்துக்காட்டு:வேலைவாய்ப்பு உருவாக்கும் முதலீடுகளை
அரசு கண்காணிக்க முடிவு.
 
உடுக்கைத் தலைப்பு
 
இதில் உடுக்கை வடிவத்தில் தலைப்பு ஒருவரி உள் அடங்கியும், முன் பின் உள்ள வரிகள் சற்று முன்னால் தொடங்குவனவாகவும் அமையும்.
எடுத்துக்காட்டு:
ஸ்நாப்டீலை
பிளிப்கார்ட்டுக்கு விற்க
நெக்ஸஸ் ஒப்புதல்.
 
===தலைப்பு எழுத்து வகை===
 
தலைப்புகள் செய்திகளை வாசிக்கும் ஆர்வத்தை ஊட்டுகின்றன.அத்துடன் இவை அச்சடிக்கப்படும் எழுத்தின் அளவும் செய்தித்தாள் வாசிப்பில், விற்பனையில் முக்கிய இடம் வகிக்கின்றன. மிகப் பெரிய எழுத்துகளில் வரும் தலைப்புகள்,தினத்தந்தி மாலைமுரசு, மாலைமலர் ஆகியவற்றில் காண முடியும். எழுத்தின் அளவை செய்திகளின் முக்கியத்துவம் நிர்ணயிக்கின்றது.
 
===உசாத்துணை நூல்கள்===
வரி 279 ⟶ 434:
ராயப்பேட்டை, சென்னை-14
ஜூலை-2010.
 
4.தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.
 
5.மே 12,2017, தி இந்து நாளிதழ்
 
6.மே 13,2017, தி இந்து நாளிதழ்
 
7.மே 13,2017,தினமணி நாளிதழ்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாளிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது