உத்தரகாண்டம் (ஒட்டக்கூத்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
 
"'''உத்தரகாண்டம்"''' என்பது [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தின்]] இறுதிக் காண்டமாக [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரால்]] இயற்றப்பட்டது.<ref>[http://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=271&pno=59 இராமாயண உத்தரகாண்டம், பக்கம் 59]</ref>
 
கம்பர் தம் இராமாயணத்தைப் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன் வீடணன் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.
வரி 60 ⟶ 61:
 
==சீதை வனம்புகல்==
மக்களுக்குச் சீதையின் பாலுள்ள கருத்து, மாறுபட்ட நிலையிலிருந்தது காமத்தினை நயந்து செய்யும் இராவணனது இலங்கையில் சிறையிருந்த சீதையை அயோத்தி அரசியாக அமர்த்தியது சற்றும் பொருத்தமாக இல்லை என்று கூறலாயினர். இம் மொழிகளைக் கேட்ட இராமன், தன் மனைவியைக் காட்டிலும் நாட்டு மக்களை உயிராக உன்னும் தன்மையினன். மக்களுக்காகவே மன்னவன், என்ற மாண்புறு சிந்தையோடு வாழும் இயல்பினன். இராமன், சீதையின்பால் எல்லையற்ற பேரன்பைக் கொண்டவன் இராமன் என்பதைச் சித்திர கூட மலையில், இயற்கைக் காட்சியைக் காண்கின்றபோது அவற்றினைச் சீதையோடு ஒப்பிட்டுப் பார்த்து மனமகிழ்ந்தவன். அத்தகையோன் இச்சொற்களைக் கேட்டதும் இலக்குவனனிடம் சீதையைக் காட்டகத்தே விட்டு விட்டு வருமாறு ஆணையிட்டான். உயிரினும் இனிய மனைவியை விட நாட்டு மக்களின் கருத்தையே உயரியதாகக் கொண்ட இராமனது, சிறப்பு மிகு கொள்கையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதுதான். உத்தரகாண்டத்தின் தனித்தன்மையாகும் என்பது ஒரு கருத்து. ஆனால் நவீன காலவிமர்சகர்கள் இச்செயலை ஏற்பதில்லை. பெண்னடிமைதனத்தின் தீவிரமான வடிவத்தை இந்த செயல்காட்டுவதாக விமர்சனம் உள்ளது. இலக்குவணன் சீதையை வனத்தில் விட்ட பின்பு இராமன் இட்ட கட்டளையை வெளிப்படுத்தியவுடன் சீதை மீளாத் துயரங்கொண்டாள்.
 
கம்பராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.
இலக்குவணன் சீதையை வனத்தில் விட்ட பின்பு இராமன் இட்ட கட்டளையை வெளிப்படுத்தியவுடன் சீதை மீளாத் துயரங்கொண்டாள்.
 
==மேற்கோள்கள்==
:விழுந்தனள் புரளும் அந்த வெந்துயர் பொறுக்க மாட்டாது
<references/>
:எழுந்தனள் இரிய வீழும் இருகையால் வயிற்றை எற்றும்
:அழுந்திடும் துயர வெள்ளத்து அனையவள் ஆவி காணாக்
:கழிந்தனள் சீதை என்று கலங்கினர் கடவு ளோர்கள் (உத்.பா.753)
 
என்று கூறிய நிலையில்
 
:வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்
:இந்த இப்பிறவி விக்கிரு மாதரைச்
:சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
:தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் (இரா.சூளாமணி.34)
 
என்று முன் அனுமனிடம் கூறியதை, இங்கு விதியினிடம் கூறினாள். இராமனடைய காதல் மிகுதியைப் புலப்படுத்தி அத்தகைய காதல் உள்ளத்தையும் கலக்கி என்னைக் காட்டில் விடச் செய்த விதியே! இனி என்ன என்ன செய்வாயோ?
 
:ஏதமுறு பழியைச் சுமத்தி இப்பிறப் பில்உனை யொழிய
:மாதரை என்மனத் தாலும் தொடேன்என் றுவரம் தந்த
:காதலனை மனம்க லக்கிக் காட்டில் எனைவிடு வித்து
:வேதனை நோய்மிகத் தந்த விதியே யோவிதி யேயோ (உத்த.பா.777)
 
மேலும்
 
:தக்க கணவன் சீறித் தன்னைக் கைவிட்டு அகன்றால்
:புக்ககத் தார்கை விடுவர் பிறந்தகத் தார்போற் றார்கள்
:அக்கண மேபழி இடுவர் அன்னியர் கள்அரு வினையேன்
:மிக்க ஓரிடம் காண்கி லேன்விதி யேயோ விதியேயோ (உத்த.பா.780)
 
என்று கூறி அழுகிறாள்.
 
கணவனால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணைப் புக்ககத்தாரும் பிறந்தகத்தாரும் அயலகத்தாரும் புறக்கணித்து விடுவர். ஆதலின் இம்மூன்றகங்களிலும் வேறாய் மிக்கிருக்கும் ஓரகம் இல்லை யாதலின் மிக்கோரிடம் காண்கிலேன் என்றாள். ஈண்டு மனைவியின் பொதுவான இழிநிலையைக் கூறித் தன்னிலையைச் சீதை, புலப்படுத்தியதோடு அருவினை என்றது யாராலும் நீக்குதற்கு அரிய வினை, தான் செய்த தீவினையோ என்கிறாள்.
 
==விதவை இடும்பை==
இராவணனின் சிற்றன்னை கும்பி நசி என்பவனை மது என்றும் அரக்கன் கவர்ந்து சென்றான் என்ற செய்தியை வீடணனன் மூலம் அறிந்த இராவணன் நாற் படைபலத்தோடு அவனை நோக்கிச் சென்றான். அது போழ்து கும்பி நசி இராவணனை வணங்கி மதுவை ஒன்றும் செய்யாதே. அவன் என்னை இராக்கத மண முறையில் மணந்து கொண்டான். ஆதலால் அவனைக் கொல்லாதே என்று இராவணன் திருவடியில் வீழ்ந்து அழுதுகொண்டே சொல்கின்றாள்.
 
:மக்கள் இழந்த இடும்பையினும் மனையாள் இழந்த இடும்பை
:யினும் மிக்க இடும்பை வேல்வேந்தே! விதவை இடும்பை
:யென விளம்பத் தக்கது. அதனால் என் கழுத்தில் தாலி நீ
:தந்தருள்
 
என்று வேண்டுகின்றாள்.
 
இச்செய்யுளின் கருத்தாழத்தை உணர்ந்த அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரப் பதிகத்தில் “ஆரஞர்“ உற்ற வீரபத்தினி என்ற அடியின் உரையில் “ஆரஞர்=பெரிய வருத்தம் ஆவது கணவனை இழத்தல்“ என்று விளக்கம் கூறிவிட்டு
 
:மக்கள் இழந்த இடும்பை யினும் ம னையாள் இழந்த
:இடும்பை யினும் மிக்க இடும்பை வேல்வேந்தே விதவை இடும்பை
:யென விளம்பித் தக்கவதனால், என்கழுத்தில் தாலி நீதந்தருள்
:என்று தொக்க மணி நீண் முடியானைத் தொழுது பின்னுமிவை
:சொல்லும் (உத்த.திக்கு.பா.137)
 
என்றார். அடியார்க்கு நல்லார் காலத்திலேயே இந்நூல் சிறப்புற்றிருந்த தென்பதை யறியலாம்.
 
==மணமகன் தேர்வு==
மயன் தன் மகளாகிய மண்டோதரிக்கு ஏற்ற மணமகன் தேர்வு செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தோடு வருகையில் அவ்வெண்ணத்தின் வெள்ப்பாட்டைச் சமுதாய வெளிப்பாடாக ஒட்டக் கூத்தர் கூறும் நிலையில் நோக்கல்.
:“பண்புடைய குடிப்பிறப்பும் பழிப்பில்லாப் பேரழகும் பரந்த கேள்வி நுண்பொருளும் நீரொழியப் பால்நுகரும் அன்னம்போல் நோக்கித் தேரும்
:ஒண்பொருளும் இந்நான்கும் உடையாரைக் கிடையாத இவ்வுலகம் தன்னில்
:பெண்பெறுகை தனைப்போலப் பெரியதுயர் தானுண்டோ பேசும் காலே (உத்.60)
 
என்கிறார், மேலும்,
 
:இந்நான்கும் உடையாரைத் கிடையாதிவ் வுலகம் தன்னில்
:பெண்பெறுகை தன்னைப்போலப் பெரியதுயர் தானுண்டோ பேசுக்காலே (உத்.60)
 
என்று உள்ள வேதனையோடு கூறியிருப்பது. இக்காலத்தவர்க்குப் பொருந்திய சொல்லாகக் காணப்படுகிறது. ஒரு பெண்ணைப் பெற்றவளே இவ்வாறு சொல்லுவானாயின் பல பெண்களைப் பெற்றவர்களின் நிலை என்னாகும். அவர்கள் துன்பியல் சொல்லில் அடங்குமோ.
 
பெண்ணை மணப்பதற்கு நற்குடியில் பிறந்திருத்தல் வேண்டும். ஆனால், மண மகனின் கல்வி, செல்வம், அழகு, இளமை ஆகியனவற்றைப் பற்றிக் குலத்தோர் நினையார். அவர்கள் நோக்கமெல்லாம் மணமகன் நல்ல குடிப்பிறப்பு உள்ளவனாக இருத்தல் வேண்டும் என்பதேயாகும். பெண்ணின் தந்தையோ தன் பெண்ணை மணக்க வருகின்றவர் கல்வியாற்றல் மிகக்வராக இருத்தல் வேண்டும். அஃதே அவர்தம் குறிக்கோளாகும். மணமகனின் செல்வம், இளமை ஆகியவற்றைப் பற்றி எண்ணார். பெண்ணைப் பெற்றத் தாயோ தன் பெண்ணிற்குக் கொழு நனாக வருபவன் செல்வமிக்கவனாக இருத்தல் வேண்டும் என்று விரும்புவாள். அஃதே அவர்தம் குறிக்கோளாம். மணமகனின் குலம், கல்வி, அழகு ஆகியனவற்றை உன்னார். ஆனால், மணமகளோ தனக்குக் கணவனாக வருபவன் இளமையும் அழகும் உடையவராக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இருப்பாள். ஆனால் குலம், கல்வி, செல்வம் ஆகியனவற்றைப் பற்றிப் பெரிதும் சிந்திக்க மாட்டாள்.
மணமகனைத் தேர்ந்தெடுப்பதில் குலத்தோர், தந்தை, தாய், கன்னிப்பெண் ஆகியோரின் மன நிலையை நன்காராய்ந்து ஒருவருக்கொருவர் வேறுபட்ட கருத்தினராய் இருப்பர் என்பதைத் தெளிவாக இயம்பியுள்ளார் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்.
இக்கருத்தமைந்த பாடலைக் காணல்
 
:குலம்வேண்டு மென்றிருப்பர் குலத்துள்ளார் கல்வியினால் குறையா ஞானப்
:பலம்வேண்டும் என்றிருப்பர் தந்தைமார் பரந்தபெருஞ் செல்வ முள்ள
:நலம் வேண்டும் என்றிருப்பர் தாய்மார்கள் யவ்வனமும் அழகும் சார்ந்த
:நலம் வேண்டும் என்றிருப்பர் நாறுகுழல் கன்னிமார் நலத்தின் மிக்கார்
என்பர் இராவணன் பிறப்புப் படலம் செ.60
இழுமென் இசை
அசுவமேத யாகத்தைப் பெண்கள் காணச் செல்கையில் அவர்களுக்கேற்ப மெல்லோசையை மிக்கொலிக்குமாறு செய்யுள் செய்துள்ளார் ஒட்டக் கூத்தர்.
கஞ்சமலர் விஞ்சுகவின் அஞ்சிய முகத்தோர்
கொஞ்சுகிளி மென்சொலியர் கொங்கைகள் சுமந்தே
வஞ்சிபுரை நுண்ணிடை வருந்த வழிகாணா
மஞ்சர்கள் மனந்தொடர மங்கையர்கள் போனார் (உத்த.49)
என்பர்.
இச்செய்யுளில் கஞ்சமலர் விஞ்சுகவின் அஞ்சிய எனவும் கொஞ்சுகிளி மென்சொலியர் கொங்கைகள் சுமந்தே எனவும் வஞ்சிபுரை நுண்ணிடையர் வருந்த எனவும் மெல்லெழுத்துக்களே மிக்கு வருமாறு தொகுத்து அழகு செய்துள்ளமையைக் காணலாம்.
பொருண்மைக்கேற்ப மெல்லோசை விஞ்சப்பாடியுள்ளது போலவே பாடப்படும்பொருண்மையின் நடைக்கேற்பவும் செய்யுள் செய்கின்றார் ஒட்டக்கூத்தர். மேலும்,
:வண்ணமோ முகிலோ மையோ மரகத வடிவே வள்ளல்
:ஒண்ணிற மிவையொன் றாக உருக்கிய உருவோ என்பார்
:கண்ணினை செவ்வாய் பாதங் கைத்தலம் கமல மென்பார்
:புண்ணியஞ் செய்தார் இந்தப் புறக்கொடை தொழுவா ரென்பார் (உத்த.84)
 
இப்பாடலின் ஓசை நலம் இழுமென் ஓலைசலத்தோடு இலங்குகின்றது. ஒட்டக்கூத்தர் பாடல்களில் பல இந்நிலையிலுள்ளன.
 
நிறைவாக,
 
கம்பராமாயணத்தில் அமைந்துள்ள ஆறுகாண்டங்களைவிட உத்தரகாண்டம் வேறுபட்ட, தனித்தன்மையுடையது. உத்தர காண்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஆறு காண்டங்களில் சொல்லப்படும் நிகழ்ச்சிகளுக்கு உரமூட்டுவனவாகவும் பெருமை சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உலகியல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாக ஒட்டக்கூத்தர் சுட்டியுள்ளார். இந்நூலில் வருகின்ற செய்யுட்கள் இனிய இழுமென் ஓசையோடு இலங்கும். நன்னடை, உவமை, உருவகங்கள், தற்குறிப்பேற்றம், பிற அணிகள் ஆகியன நன்கமைந்துள்ளன. இதன் கண் அமைந்துள்ள செய்யுட்கள் பாவினத்தைச் சார்ந்தவையாகும்.
 
[[பகுப்பு:இராமாயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/உத்தரகாண்டம்_(ஒட்டக்கூத்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது