"கணக் குறியீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,559 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
இம்முறையில் வெற்றுக் கணமானது { } எனக் குறிக்கப்படுகிறது.
 
=== கணிதக்கட்டமைப்பு முறை ===
ஒரு கணத்திலுள்ள அனைத்து உறுப்புகளின் பண்புகளை நிறைவு செய்யும் வகையில் அமைவது கணிதக்கட்டமைப்பு முறையாகும் (Set Builder Notation).
கணிதக்கட்டமைப்பு முறையில் கணத்தை விளக்குவதற்கு கணிதக் குறியீடுகளும் சில மரபான குறிப்பு மொழிகளும் பயன்படுத்தப்படுகிறது.
 
:எடுத்துக்காட்டாக:
:''F'' = {வர்க்க எண்ணிலும் நான்கு குறைவான முதல் 20 எண்கள்} - வருணனை முறை
::''F'' = {–4, –3, 0, ..., 357} - பட்டியல் முறை
:''F'' = {<math>n^2</math> – 4 ''':''' ''n'' ஒரு முழு எண், மற்றும் 0 ≤ ''n'' ≤ 19} -கணக்கட்டமைப்பு முறை
 
கணக்கட்டமைப்பு முறையில் பயன்படுத்தப்படும் முக்கால் புள்ளி அல்லது விளக்கக்குறி (''':''') என்பதனை "எப்படி எனில்" அல்லது ஆங்கிலத்தில் '''such that''' என்று படிக்க வேண்டும்.
:கணக்கட்டமைப்பு முறையை வாசிக்க வேண்டிய விதம்:
“மேற்கண்ட F என்னும் கணத்தின் உறுப்புகளாவன <math>n^2</math> – 4 என்னும் வகையான எண்களாகும் - எப்படி எனில் n என்னும் முழு எண்ணானது 0 முதல் 19 வரை, இவ்விரு எண்களும் உட்பட, உள்ள எண்களாகும்”.
 
:முக்கால் புள்ளி (:)என்னும் விளக்கக் குறிக்குப் பதிலாக சில நேரங்களில் பைப் (pipe) என்னும் நெடுங்கோடும் '''|''' குறியாகப் பயன்படுத்தப்படும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2293637" இருந்து மீள்விக்கப்பட்டது