அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருவருக்குமே அசோகரைப் பிடிக்கவில்லை. அமைச்சர்கள், போர் வீரர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பொ
சி Balurbalaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 48:
 
அசோகர், [[பிந்துசாரர்|பிந்துசாரருக்கும்]] அவரது மனைவி [[சுமத்திராங்கி]] என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் [[செல்லுகஸ்நிக்கேடர்]] என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் [[அவந்தி]] நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் (மகிந்த தேரர்),சங்கமித்தையும். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.
ஒருவருக்குமே அசோகரைப் பிடிக்கவில்லை. அமைச்சர்கள், போர் வீரர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பொதுமக்கள், அவ்வளவு ஏன், அப்பா பிந்துசாரருக்கும்கூட அசோகரைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன்? இரண்டு காரணங்கள். ஒன்று, அசோகர் பார்ப்பதற்குக் கம்பீரமாக இருக்க மாட்டார். எப்போது பார்த்தாலும் சோர்வாக, ஊதினால் பறந்துவிடும் தூசிபோல் இருப்பார். இவரைப் பார்த்தால் யாராவது இளவரசர் என்று சொல்வார்களா? புகழ்பெற்ற மௌரியப் பேரரசின் குழந்தை, இல்லை இல்லை, அரச வாரிசு இப்படிக் கொத்தவரங்காய்போல் இருந்தால் யாருக்குப் பிடிக்கும்?
 
இது போதாது என்று தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, கால் வலி என்று மாற்றி மாற்றி ஏதாவதொரு பிரச்சினை வந்துகொண்டிருந்தது இரண்டாவது காரணம். ஓடியாடி விளையாடவேண்டிய வயதில் ‘லொக் லொக்’ என்று இருமியபடி போர்வைக்குள் படுத்துக்கொண்டிருந்தார் அசோகர். எப்போதாவது என்றால் பரவாயில்லை, நிரந்தரமான நோயாளியாக இருக்கும் ஓர் இளவரசரை யாருக்குதான் பிடிக்கும், சொல்லுங்கள்?
 
அதுவும், எப்பேர்பட்ட குடும்பம் அது! அசோகரின் தாத்தா சந்திரகுப்தர், மௌரியப் பேரரசை நிறுவியவர். வீரத்துக்கும் தீரத்துக்கும் பெயர் போனவர். அப்பா பிந்துசாரரோ எதிலும் சளைத்தவர் அல்ல. இப்படிப்பட்ட குடும்பத்துக்கு இப்படியொரு நோஞ்சான் வாரிசா கிடைக்க வேண்டும் என்று அரண்மனையிலும் வெளியிலும் எல்லோரும் பேசிக்கொண்டனர்; வருத்தப்பட்டுக்கொண்டனர். கிண்டலுக்கும் குறைச்சலில்லை.
 
இது அசோகரின் காதில் விழுந்தபோது, அவர் உடைந்து போனார். சோகமும் அதைவிட அதிகமாகக் கோபமும் அவரைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தன. என் உடல் நிலை மோசமாக இருப்பது என் தவறா? ஆம், கண்ணாடி முன் நிற்கும்போது நான் கம்<DP>பீரமாக இல்லைதான். ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? என்னை ஏன் அனைவரும் வெறுக்க வேண்டும்? இதுதான் நான். என்னால் இப்படித்தானே இருக்க முடியும்?
 
சற்று வளர்ந்தபோது அசோகருக்குப்<DP> புரிந்துவிட்டது. இல்லை, நான் இப்படி இருப்பதால்தான் என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று எனக்குத் தெரியும். போர்வையை உதறித் தள்ளிவிட்டு வாளை எடுத்துக்கொண்டார் அசோகர். மின்னல் வேகத்தில் வாள் அவருக்குப் பழகிவிட்டது. ஆறாவது விரல் போல் கையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. இப்போது அவர் எல்லோரையும் பழிவாங்க ஆரம்பித்தார். நோயாளி இளவசரன் என்று கிண்டலடித்தவர்களைத் துரத்திப் பிடித்துச் சிறையில் அடைத்தார். நோஞ்சான் என்று சிரித்தவர்களுக்கு வாளால் பதில் அளித்தார்.
 
அசோகரா, ஐயோ அவர் மிகவும் கொடூரமானவர் அல்லவா என்று அரண்மனைக்குள் எல்லோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். இளவரசரா, அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள், கொஞ்சம் தவறினாலும் கொன்றே போட்டுவிடுவார் என்று பாடலிபுத்திரம் மக்கள் அலறினார்கள். அவ்வளவு ஏன், பிந்துசாரரே திகைத்துவிட்டார். உண்மையிலேயே இவன் என் மகன் அசோகன்தானா?
 
இப்படியாக அசோகர் வீர தீரமிக்க ஒரு மௌரியப் பேரரசராக மாறி எல்லோரையும் நடுநடுங்க வைத்தார் ( THE HINDU JULY 5,2017 )
 
===பெயர்கள்===
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது