எண்ணெய்க் கிணறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''எண்ணெய்க் கிணறு''' என்பது பெற்றோலிய எண்ணெய் மற்றும் [[வளிம ஐத...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Oil well.jpg|thumb|A [[Pumpjack]] pumping oil from an oil well in [[Texas]].]]
'''எண்ணெய்க் கிணறு''' என்பது பெற்றோலிய எண்ணெய் மற்றும் [[வளிம ஐதரோகாபன்]] ஆகியவற்றைக் கண்டறிவதற்காக அல்லது அவற்றை எடுப்பதற்காகப் புவியின் மேற்பரப்பினூடு செய்யப்பட்ட துளைகளைக் குறிக்கும். இவை பல ஆயிரம் [[மீட்டர்]]கள் வரை ஆழமுள்ளவை.
 
வரி 5 ⟶ 6:
 
 
[[Image:Oil Well.png|right|360px|An oil well consists of pipe cemented into a drilled hole through which hydrocarbons can be produced.]]
இப்பகுதிகளில் ஆழம் குறைந்த [[பள்ளம்|பள்ளங்களைத்]] தோண்டி எண்ணெயை எடுத்தனர். அத்துடன் கைகளால் தோண்டப்பட்ட சுமார் 35 மீட்டர்கள் வரை ஆழம் கொண்ட துளைகள் 1594 ஆம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. பாக்குவே முதலாவது உண்மையான எண்ணெய் வயலாகும். 1830 ஆம் ஆண்டளவில் இப்பகுதியிலிருந்த சுமார் 116 கிணறுகளில் இருந்து 3,840 மெட்ரிக் டன்கள் (சுமார் 28,000 பீப்பாக்கள்) எடையுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகத தெரிகிறது. 1849 ஆம் ஆண்டில் ரஷ்யப் பொறியியலாளரான எஃப். என். செம்யெனோவ் என்பவர் அப்செரோன் குடாநாட்டில் எண்ணெய்க் கிணறு தோண்டுவதற்கு [[வடக் கருவி]] (cable tool) ஒன்றைப் பயன்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் [[பென்சில்வேனியா]]விலுள்ள புகழ் பெற்ற கிணறு கர்னல் டிரேக் என்பவரால் தோண்டப்பட்டது. 19 ஆன் நூற்றாண்டின் இறுதியில் பாக்குவிற்கு அண்மையிலுள்ள பிபி-எய்பட் (Bibi-Eibat) எண்ணெய் வயலில் கடலுள் துளையிடல் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ அதே காலப்பகுதியில் 1896 ஆம் ஆண்டில் [[கலிபோர்னியா]]க் கரையில் அமைந்திருந்த சம்மர்லாண்ட் எண்ணெய் வயலில் முதல் கடலினுள் அமைந்த எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டது.
 
 
தொடக்ககால எண்ணெய்க் கிணறுகள் வடக் கருவிகளை நிலத்துள் அடித்துச் செலுத்துவதன் மூலம் தோண்டப்பட்டன. பின்னர் [[சுழல் துளைப்பான்]]கள் (rotary drill) பயன்பாட்டுக்கு வந்தன. இவை கூடிய ஆழத்துக்கும் விரைவாகவும் துளைகளை இட வல்லவையாக இருந்தன. 1970 களுக்கு முன் பெரும்பாலான எண்ணெய்க் கிணறுகள் [[நிலைக்குத்து|நிலைக்குத்தானவை]]. எனினும் தற்காலத் துளைக்கும் தொழில்நுட்பங்கள், நிலைக்குத்திலிருந்து விலகிய திசைகளிலும் துளைகளை இடக்கூடிய வல்லமையை உருவாக்கியுள்ளன. போதிய அளவு ஆழத்துக்குச் செல்லக்கூடிய சரியான கருவிகள் இருந்தால் [[கிடைநிலை]]யிலும் துளைகளை இடலாம். ஐதரோகாபன்களைக் கொண்டிருக்கும் [[பாறை]ப் படைகள் கிடையாகவே இருப்பதால், பெற்றோலிய வலயத்தில் இடப்படும் கிடையான துளைகள் அவ்வலயத்தில் கூடிய மேற்பரப்பைக் கொண்டுள்ளன. இதனால் [[உற்பத்தி வீதம்|உற்பத்தி வீதமும்]] கூடுகின்றது. சரிவாக அல்லது கிடையாகத் துளைப்பதன் மூலம் துளைக்கும் இடத்திலிருந்து விலகியிருக்கும் எண்ணெய்ப் படிவுகளையும் அணுகக் கூடியதாக உள்ளது. இதனால், துளைகருவிகளை அமைக்க முடியாத அளவுக்குக் கடினமான இடங்களுக்கு, அல்லது [[சூழலியல்]] தொடர்பான பெறுமதியுள்ள இடங்களுக்கு அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்குக் கீழுள்ள பகுதிகளிலிருந்தும் எண்ணெய் எடுக்க முடிகிறது.
 
==எண்ணெய்க் கிணற்றின் வாழ்வுக்காலம்==
எண்ணெய்க் கிணறு ஒன்றின் உருவாக்கத்தையும் அதன் பயன்படு காலத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 
* திட்டமிடல்
* துளைத்தல்
* நிறைவு செய்தல்
* உற்பத்தி
* கைவிடல்
 
 
"https://ta.wikipedia.org/wiki/எண்ணெய்க்_கிணறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது