"சிதம்பர புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,921 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிதம்பர புராணம் என்னும் நூலைப் புராணத் [[திருமலைநாதர்]] 1508ஆம் ஆண்டு எழுதிமுடித்தார்.
இந்த நூலைப் பரஞ்சோதி முனிவர் இயற்றினார் எனக் காட்டும் பதிப்புகளும் உள்ளன <ref>
முற்றுமுணர் மெய்கண்ட சந்ததிக்கோர் தீபமென முதன்மை கொண்ட

கொற்றவன்றன் குடிமருவு குலவு முமா பதிசிவன் பொற்கோயிலுண்மை

சொற்ற புரானமுமிருக்கப் பின்னுமொரு வகையானுஞ் சொல்வான் புக்கே

மற்றவன்றன் றிருவடியின் வழி வந்தோர்க் கடியன்எனும் வழக்கான் மன்னோ.

இந்த பாடல் சிதம்பர புராணம் இது சைவ பரஞ்சோதி மாமுனிவர் அருளி செய்த மூலமும் துரை மங்கலம் சிவப்பிரகாச அய்யர் அவர்களால் பொழிப்புரை செய்து அருணாச்சல முதலியாரால் பார்வையிடப்பட்டு மாணிக்க முதலியார் அவர்களது மனோன்மணி விலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்க பட்ட நூலில் உள்ளது .

ஓலைச் சுவடியிலும் இப்பாடல் உள்ளது . இப்பாடலின் உரையில் பரஞ்சோதி முனி என்னும் அடியன் சிதம்பர புராணம் சொல்லத் தொடங்கினேன் என்று உள்ளது. இந்நூலின் கடைசியில்

அருமறையின் சிரத்தொளியாய் ஆனந்த நாட்டியஞ் செய்ய மரர்க் கன்பாய்

திருவருள் பெற்றுயர் சைவ புராணத்திற் சிதம்பரத்தின் றிகழுமேன்மை

பொருடெரிய தமிழ் விருத்த யாப்பதனான வரசங்கள் பொழிய மன்னும்

திருமலைநாதன் புதல்வன் பரஞ்சோதி மாமுனிவன் செப்பினானே

என்ற பாடல் உள்ளது. ஆனால் இப்பாடல் ஓலைச் சுவடியில் இல்லை.
முனைவர். ந . ஜெயவித்யா
</ref>

இந்த நூலில் 814 பாடல்கள் உள்ளன. காப்புச்செய்யுள், பாயிரம், 9 சருக்கங்கள் என்று இதன் பாகுபாடுகள் அமைந்துள்ளன.
இதில் குலோத்துங்க சோழனுக்கும் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன். இவன் ‘பேரம்பலம் பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் என்று முடிபுனைந்த குலோத்துங்க வளவன்’ எனப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளான்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2388480" இருந்து மீள்விக்கப்பட்டது