மெல்பேர்ண் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மெல்போர்னில் உள்ள சர்வதேச விமான நிலையம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Airport | name = மெல்பேர்ண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:18, 19 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MELஐசிஏஓ: YMML), ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம். இது மெல்பேர்ண் தனது சேவையை வழங்குகிறது. 1970ல் அருகிலிருந்த எஸ்சண்டன் வானூர்தி நிலையத்திற்கு மாற்றாக பன்னாட்டு முனையமாக துவங்கப்பட்டது. இந்நிலையம், மெல்பேர்ண் நகரத்திலிருந்து 23 கிலோமீட்டர்கள் (14 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.

மெல்பேர்ண் பன்னாட்டு வானூர்தி நிலையம்

IATA: MELICAO: YMML
MEL is located in ஆத்திரேலியா
MEL
MEL
வானூர்தி நிலைய இருப்பிடம்
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
உரிமையாளர்/இயக்குனர் ஆஸ்திரேலிய பசிபிக் வானூர்திக் கழகம்
சேவை புரிவது மெல்பேர்ண்
அமைவிடம் மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா
உயரம் AMSL 434 அடி / மீ
ஆள்கூறுகள் 37°40′24″S 144°50′36″E / 37.67333°S 144.84333°E / -37.67333; 144.84333
இணையத்தளம் melbourneairport.com.au
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
09/27 2,286 அசுபால்ட்டு
16/34 3,657 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2015/2016)
பயணிகள் இயக்கங்கள் 33,704,854[1]
விமான இயக்கங்கள் 234,789[1]
பொருளாதாரம் (2012) $6.8 billion[2]
சமூக தாக்கம் (2012) 47.4 thousand[2]
மூலம்: ஆஸ்திரேலிய வானூர்தி முனையம்[3]

வரலாறு

இவ்வானூர்தி நிலையம் துவங்குவதற்கு முன் எஸ்சாண்டன் வானூர்தி நிலையம் தான் மெல்பேர்ண் நகரின் தலையாய நிலையமாக செயல்பட்டு வந்தது. பயணிகள் வருகை அதிகரிப்பால் 1950ல் எஸ்சாண்டன் நிலையம் பன்னாட்டு முனையமாக தரம் உயர்த்தப்பட்டது. 1950களின் இடையில் பன்னாட்டு விமானங்களை கையாள முனையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் நகரின் மையத்தில் நிலையம் இருந்ததால், அதனைச் சுற்றி குடியிருப்புகளும் ஆக்கிரமிப்புகளும் பன்மடங்கு பெருகியிருந்தன. இதனை அகற்றிவிட்டு நிலையத்தை விரிவுபடுத்துவது முடியாத காரியமாக உணர்ந்தனர்.

எஸ்சாண்டன் நிலையத்திற்கு மாற்றாக வேறு இடத்தினை தேர்வு செய்ய 1958ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனி குழு ஒன்று உருவாக்கப்பட்டது.[4]. இறுதியில் 1959ம் ஆண்டு மெல்பேர்ண் நகரின் அருகே 5,300 ha (13,000 ஏக்கர்கள்) பரப்பளவில் துள்ளாமரைன் என்ற இடத்தைத் தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அரசு [5]. 1959ம் ஆண்டு மே மாதம் துள்ளாமரைனில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதாக அன்றைய பிரதமர் இராபர்ட் மென்சிஸ் அறிவித்தார். இதற்காக 27 நவம்பர் 1962ல் ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு $45 மில்லியன் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.[6][7][8][9][4][10]

விமான நிலையப் பணிகள் முழுமையடைந்து 1970ம் ஆண்டு சூலை 1ம் நாள் அன்றைய பிரதமர் ஜான் கார்டன் திறந்து வைத்தார். இதன் மூலம் மெல்பேர்ண் பன்னாட்டு வானூர்தி முனையமாக 20 ஆண்டுகள் செயல்பட்டு வந்த எஸ்சாண்டன் நிலையத்தில் சேவை முடிவிற்கு வந்தது.[11] இருந்தும் 1971ம் ஆண்டு சூன் மாதம் 26ம் நாள் வரை எஸ்சாண்டன் வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்காக செயல்பட்டு வந்தது. புதிய வானூர்தி நிலையம் செயல்படத்துவங்கிய முதலாம் ஆண்டில் ஆறு பன்னாட்டு வானூர்திகளோடு மொத்த வெளிநாட்டுப் பயணிகள் வருகை 155,275 ஆக பதிவாகியது.[12][13][13]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Airport Traffic Data 1985–86 to 2015–16". BITRE. March 2016. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
  2. 2.0 2.1 "Melbourne airport – Economic and social impacts". Ecquants. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
  3. Aeronautical Chart பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 "2010 Annual Report" (PDF). Melbourne Airport. 2010. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.
  5. "Melbourne Airport train link derailed by buck-passing". The Age (Melbourne, Australia). 26 June 2010. http://www.theage.com.au/travel/travel-news/train-derailed-by-buckpassing-and-vested-interests-20100625-z9sx.html. 
  6. "Melbourne to Get Jetport in 5-Year Development Plan". The New York Times. 27 November 1962. http://select.nytimes.com/gst/abstract.html?res=F30F15FB3D5A157B93C5AB178AD95F468685F9. பார்த்த நாள்: 27 September 2008. 
  7. "12,000-Car Melbourne Jam". The New York Times. 29 June 1970. http://select.nytimes.com/gst/abstract.html?res=F3061EFD3E5D137B93CBAB178DD85F448785F9. பார்த்த நாள்: 27 September 2008. 
  8. "Approval Given For New Melbourne Airport". The Canberra Times (Australian Capital Territory, Australia) 34, (9,553): p. 4. 18 March 1960. http://nla.gov.au/nla.news-article105906147. பார்த்த நாள்: 13 August 2017. 
  9. "Spending on two airports will be increased to £32m.". The Canberra Times (Australian Capital Territory, Australia) 39, (11,120): p. 3. 2 April 1965. http://nla.gov.au/nla.news-article131764839. பார்த்த நாள்: 13 August 2017. 
  10. "Melbourne to Get Jetport in 5-Year Development Plan". The New York Times. 22 December 1967. http://www.newspaperarchive.com/newspapers1/na0028/6793932/51096042_clean.html. பார்த்த நாள்: 27 September 2008. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Tullamarine—a city's pride". The Canberra Times (Australian Capital Territory, Australia) 44, (12,664): p. 11. 2 July 1970. http://nla.gov.au/nla.news-article110329924. பார்த்த நாள்: 13 August 2017. 
  12. "Essendon Airport History". City of Moonee Valley. பார்க்கப்பட்ட நாள் 20 July 2008.
  13. 13.0 13.1 "1997–1998 Annual Report" (PDF). Melbourne Airport. 1998. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.

வெளியிணைப்புக்கள்